ஆமா இந்த "வெப்ப அலை" என்றால் என்ன.. இந்தியாவில் எங்கு அதிகம் ஏற்படும்! இதனால் ஏற்படும் பாதிப்பு என்ன
டெல்லி: இந்த கோடைக் காலத்தில் நாம் வானிலை தொடர்பான செய்திகளில் வெப்ப அலை வீசும் என்ற தொடரை அடிக்கடி பார்ப்போம். இந்த வெப்ப அலை என்றால் என்ன.. இது இந்தியாவில் எங்கு அதிகம் வீசும்.. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
இந்தியாவில் இப்போது கோடைக் காலம் உச்சத்தில் இருக்கிறது. பல்வேறு இடங்களிலும் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது. ஈரோடு, திருப்பூர், கரூர் பரமத்தி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் அதிகமாக இருக்கிறது.

இதனால் பல பகுதிகளில் வெப்ப அலை வீசும் என்று வானிலை மையம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. இந்த வெப்ப அலை என்றால் என்ன.. இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது குறித்துப் பார்க்கலாம்.
எங்கு வீசும்: அதற்கு முன்பு இந்தியாவில் எந்த பகுதிகளில் எல்லாம் வெப்ப அலை ஏற்படுகிறது என்பது குறித்து சின்ன ரீக்கேப்.. மத்திய, வடக்கு மற்றும் கடலோர பகுதிகளில் தான் கோர் ஹீட்வேவ் மண்டலம் இருக்கிறது. பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலத்தில் இந்த வெப்ப அலை ஏற்படும்.. சில நேரங்களில் மட்டும் ஜூலை மாதத்திலும் வெப்ப அலை ஏற்படும் என்கிறார்கள்.
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மேற்கு மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா, மகாராஷ்டிராவின் விதர்பா பகுதி, மேற்கு வங்கத்தின் சில பகுதிகள், கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய பகுதிகளில் தான் அடிக்கடி வெப்ப அலை ஏற்படும் என்கிறார்கள் வல்லுநர்கள். அது சரி இந்த வெப்ப அலை என்றால் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வெப்ப அலை என்றால் என்ன: சமவெளியில் ஒரே பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும்போது அல்லது இயல்பிலிருந்து 4.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது அதை இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலையாக அறிவிக்கிறது. அதேபோல மலைப் பிரதேசங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை தாண்டினால்.. கடலோர பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் தாண்டினால் அதை வெப்ப அலை என்று குறிப்பிடுகிறோம்.
பாதிப்புகள்: பொதுவாக நீரிழப்பு, சோர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த வெப்ப அலையால் ஏற்படுகிறதாம். குறிப்பாக அதீத வெப்பத்தால் Heat Cramps அதாவது 102°F காய்ச்சலுடன் உடலில் வீக்கம் மயக்கம் ஏற்படும். அதேபோல வெப்ப சோர்வு- பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு ஏற்படும்.. மேலும், உடல் வெப்பநிலை 40°C அதாவது 104°F அல்லது அதற்கும் அதிகமாகச் செல்லும் போது மயக்கம், வலிப்பு மற்றும் கோமாவை ஏற்படுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் கூட ஏற்படும் ஆபத்துகள் அதிகம்..
கவனம்: அதேபோல ஓவர் வெப்பத்தால் நீரிழப்பு கூட ஏற்படும்.. வெப்ப அலைகள் ஏற்படும் போது வியர்வையை அதிகரிக்கின்றன.. இதனால் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. வெப்ப அலைகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க அடிக்கடி தண்ணீர் குடியுங்கள். தேவையில்லாமல் வெளியே செல்வதைத் தவிருங்கள்.












Click it and Unblock the Notifications