ஏசி தேவையில்லை.. ஒரு பைசா செலவு இன்றி வீட்டை குளிர்ச்சியாக வைத்து இருக்கலாம்.. இதை மட்டும் பண்ணுங்க
சென்னை: கோடைக்காலம் துவங்கி வெயில் கொளுத்த ஆரம்பித்துவிட்டது. இதனால் வெளியில் சென்றால் தான் வியர்த்துகொட்டி அவஸ்தை படுகிறோம் என்றால் ஏசி இல்லாத வீடுகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் வெப்பத்தால் தூங்க முடியாமல் தகித்து வருகிறார்கள். ஏசி இல்லாமலே ஓரளவு வீட்டை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
கோடைக்காலம் துவங்கிவிட்டதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வழக்கமாக ஏப்ரல் - மே மாதங்களில் வெயில் அதன் கோரமுகத்தை காட்டும். ஆனால், இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் இருந்தே வெயில் கொளுத்துகிறது. இதனால், மக்கள் கடும் அவஸ்தை பட்டு வருகிறார்கள். ஓரளவு வசதி படைத்தவர்கள்கூட வீட்டில் ஏசி வைத்துக்கொள்வதை பார்க்க முடிகிறது.

குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி
ஆனால், நடுத்தர, ஏழை எளிய மக்களோ ஏசி மற்றும் அதன்பிறகு வரும் கரண்ட் பில் ஆகியவை பர்ஸை பதம் பார்த்துவிடுமோ என்ற அச்சத்தில் அதை வாங்குவது பற்றி சிந்தித்து பார்ப்பது இல்லை. ஆனால் ஏசி இல்லாமலே வீட்டை ஒரளவு வீட்டை இயற்கையான முறையில் குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது எப்படி என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.
* exhaust fans என்று சொல்லக்கூடிய காற்றி வெளியேற்றும் ஃபேன்களை வெப்பம் அதிகமாக இருக்கும் அறைகளில் பயன்படுத்தலாம். அதாவது, சமையல் அறையில் அறை வெப்பமும் அதிகமாக இருக்கும் என்பதால் அங்கு எக்ஸாஸ்ட் பேன்களை பயன்படுத்துவது அறை வெப்பநிலையை கொஞ்சம் குளிர வைக்கும்.
வெப்பத்தை உருவாக்கும் கருவிகள்
ஜன்னல் அருகே ஃபேன்களை வைக்கலாம். இதன் மூலம் வெளிப்புற காற்றுகள் அதிக அளவில் உள்ளே வரும். சீலிங் பேன் மெதுவாக ஓடுகிறது என்றால், கண்டென்சரை செக் செய்து அதை மாற்றி பயன்படுத்துங்கள். வெளியிலே வெப்பம் அதிகமாகவே இருக்கிறது எங்கிருந்து குளிர் காற்று வரும் என நினைத்தால், பின்வரும் டெக்னிக்கை முயற்சித்து பார்க்கலாம். அதாவது ஃபேன்களுக்கு முன்னால் ஐஸ் கட்டிகள் ஒரு சின்ன கப்பில் வைக்கலாம். இது ஓரளவு குளிர்ச்சியை தரும்.
அதிக வெப்பத்தை உருவாக்கும் சாதனத்தை பயன்படுத்தாமல் தவிர்க்கலாம். வீட்டு சமையல் அறையில் ஓவன்கள் இருந்தால் அதற்கு சம்மர் முடியும் வரை ரெஸ்ட் கொடுக்கலாம். அதேபோல, குறைவான வெப்பம் மூலமே செய்யப்படும் உணவை தயார் செய்யலாம். டிரையர்கள், டோஸ்டர்ஸ், மைக்ரோவேவ்ஸ் போன்ற கருவிகளுக்கு ஓய்வு கொடுக்கலாம்.
ஜன்னல்களை திறந்து வைத்து இருப்பது
* வீட்டில் பழைய குண்டு பல்புகள் இருந்தால் அதை பயன்படுத்தாமல் இருப்பதே சிறந்தது. அதிக வெப்பத்தை உருவாக்காத பல்புகளை பயன்படுத்தலாம். அதாவது எல்.இ.டி பல்புகளை வீட்டில் பயன்படுத்தலாம். தேவையில்லாத நேரத்தில் பல்புகளை எரிய விட வேண்டாம். இது சிறிய விஷயம் தானே என நினைக்கலாம். இந்த சின்ன விஷயம் கூட அறை வெப்பநிலையை குறைக்க உதவும்.
* முடிந்தவரை வீட்டில் ஜன்னல்கள், கதவுகள் ஆகியவற்றை சாத்தியமான நேரத்தில் திறந்து வைக்க பாருங்கள். அதுவும் ஒரே நேரத்தில் திறந்து வைத்தால் காற்றோட்டம் தடையின்றி இருக்கும். இதனால் வெப்பத்தை அதிகம் உணர முடியாது. வீட்டில் ஏதாவது இடம் இருந்தாலோ குறிப்பாக ஜன்னல் ஓரங்களில் செடிகளை வளர்க்கலாம். தாவரங்கள் தண்ணீரை ஆவியாக்கும்போது, அவற்றைச் சுற்றியுள்ள காற்றை குளிர்விக்கும்.
* சூரிய வெளிச்சம் மறைந்த பிறகு இரவு, வெளிவெப்பம் சற்று குறையும் என்பதால், ஜன்னல்களை திறந்து வைத்துக்கொள்ளுங்கள். அதேபோல பகல் நேரத்தில் வெப்பம் அறைக்குள் நேரடியாக வராதபடி, ஸ்கீரின்களை பயன்படுத்தலாம். இரவு நேரத்தில் இவற்றை பயன்படுத்த வேண்டாம்.
-
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்












Click it and Unblock the Notifications