அதிகாலை வந்த பரபர அலர்ட்.. அடுத்த 3 மணி நேரம் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கொட்ட போகுது மழை!
சென்னை: கிறிஸ்துமஸ் நாளான இன்று அடுத்த 3 மணி நேரத்திற்குச் சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்குப் பெய்யவில்லை என்றாலும், வடகிழக்கு பருவமழை நல்ல மழையைக் கொடுத்தது. மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்த நிலையில், நீர் நிலைகள் நிரம்பின.

குறிப்பாக டிசம்பர் மாதம் கொட்டிய கனமழை பல்வேறு தரப்பினரையும் கடுமையாகப் பாதித்தது. மிக்ஜாம் புயல் காரணமாக இம்மாத தொடக்கத்தில் கனமழை பெய்தது. இதனால் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
கனமழை: தலைநகர் சென்னையில் நகர் முழுவதும் மழை நீர் தேங்கிய நிலையில், அது வடியவே சில நாட்கள் வரை ஆனது. பிரதான சாலைகளில் நீர் உடனடியாக வடிந்தாலும், உட்புற சாலைகளில் மோட்டார் வைத்து நீரை அகற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. பாதிப்புகள் மிக மோசமாக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6000 வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே கடந்த வாரம் தென்தமிழகத்தில் பல மணி நேரம் கேப் விடாமல் பெய்த மழை தென்தமிழகத்தைப் புரட்டிப் போட்டது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் மழை கொட்டியது. குறுகிய காலத்தில் அதிகப்படியான மழை கொட்டிய நிலையில், அங்கும் பாதிப்புகள் மிக மோசமாக இருந்தன. இப்படி ஒரே மாதத்தில் தமிழ்நாட்டின் இரு பகுதிகளில் கனமழை
அடுத்த 3 மணி நேரம்: இதற்கிடையே கிறிஸ்துமஸ் தினமான இன்று காலையில் 3 மணி நேரத்திற்கு ஏழு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சில பகுதிகளில் மழை நீர் தேங்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை இருக்கும் என்பதால் கிறிஸ்துமஸ் நாளான இன்று வெளியே செல்ல திட்டமிடுபவர்கள் அதற்கேற்ப திட்டமிடவும்.
வானிலை மையம்: முன்னதாக வானிலை ஆய்வு மையம் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில், "நேற்று முன்தினம் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அதே பகுதிகளில் நிலவுகிறது. இதனால் இன்று டிச.25ஆம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை டிச. 26ஆம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிச. 27, 28 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல டிச. 29 மற்றும் டிச. 30 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்" என்று வானிலை மையம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications