சென்னை வெள்ளத்தை போல.. தென் மாவட்ட வெள்ளத்திற்கு ஏன் தன்னார்வலர்கள் திரளவில்லை? இப்படி ஒரு காரணமா?
திருநெல்வேலி: 2015 மற்றும் 2023ல் சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது களத்தில் இருந்த தன்னார்வலர்கள் அளவிற்கு கூட தென் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் தன்னார்வலர்கள் களத்தில் இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
தென் தமிழ்நாட்டில் மிக கனமழை பெய்து உள்ளது. பல இடங்களில் கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. சில இடங்களில் ஒருவருடம் வரை பெய்ய வேண்டிய மழை.. ஒரே நாளில் பெய்துள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்டு வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மொத்த தென் தமிழ்நாடே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ளது.
தென் மாவட்டத்தில் இவ்வளவு பெரிய வெள்ளம் ஏற்பட்டு உள்ள நிலையிலும் கூட இங்கே நிவாரண பணிகளை செய்ய பிரபலங்கள் வரவில்லை. வடமாவட்ட மக்கள் பெரிதாக உதவி செய்ய முன் வரவில்லை, சென்னையில் இருந்து இளைஞர்கள் பெரிதாக களத்தில் இல்லை.
என்ஜிஓக்கள் பெரிதாக களத்திற்கு வரவில்லை. ஏன் எதிர்க்கட்சிகள் கூட இதை பெரிதாக களத்தில் இறங்கி பணிகளை செய்யவில்லை. சென்னைக்கு ஒன்று என்றால் தமிழ்நாடே ஓடி வருகிறது. ஆனால் தென் மாவட்டங்களுக்கு ஏன் மக்கள் வரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த மனநிலைக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

காரணங்கள்; மக்கள் பெரிதாக உதவி செய்யாததற்கு பின் பின்வரும் காரணங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
1. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட வெள்ளம் பற்றி சென்னையில் பெரும்பான்மை மக்களுக்கு தெரியவே 1 நாள் கடந்து விட்டது. சரியான வெள்ள நிலவரம் பற்றி தெரியவே நேரம் கடந்துவிட்டது.
2. பொதுவாக சென்னை போல இல்லாமல்.. தென் மாவட்ட இளைஞர்கள், மக்கள் சுயமாக களமிறங்கி பணிகளை செய்ய கூடியவர்கள். நிவாரண பணிகளுக்கு காத்திருக்காமல்.. கிராம மக்களே ஒன்று கூடி பணிகளை செய்ய கூடியவர்கள்.
3. அதேதான் இந்த முறையும் பல கிராமங்களில் மக்களே சுயமாக களமிறங்கி வீடு வீடாக நிவாரண பணிகளை செய்துள்ளனர். பல கிராமங்களில் ராணுவம் செல்ல முடியாத சூழ்நிலையில் கூட மக்கள் சுயமாக களமிறங்கி மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
4. உதாரணமாக திருச்செந்தூரிலிருந்து சென்னை நோக்கி வந்துக்கொண்டிருந்த ரயில் ஸ்ரீவைகுண்டத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த ரயிலில் 36 மணி நேரமாக உணவு, குடிநீர் இன்றி தவித்த பயணிகளுக்கு அருகில் இருந்த கிராமத்தினர் உணவு வழங்கியுள்ளனர். இங்கே ஹெலிகாப்டர் கூட உணவு வழங்க முடியாமல் கஷ்டப்பட்ட போது சுயமாக மக்கள் இறங்கி உதவி உள்ளனர்.
5. சென்னை உள்ளிட்ட வடமாவட்ட மக்கள் பெரும்பாலும் தென் மாவட்டங்களில் என்ன நடக்கிறது என்பதையே கண்டுகொள்வது இல்லை. அங்கே என்ன நடந்தாலும் பெரிதாக கவலையும் படுவது இல்லை . இதன் காரணமாக அவர்கள் வெள்ள பாதிப்பில் நிவாரணம் வழங்குவது பற்றியும் பெரிதாக யோசிக்கவில்லை.
6. சென்னையில் 2015ல் கிட்டத்தட்ட ஒரு வாரம் வெள்ளம் இருந்தது. 1 வாரம் மக்கள் உதவி இன்றி தவித்தனர். தினமும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு திணறி வந்தனர். சென்னையில் அப்போது ஏற்பட்ட நிலைமை இப்போது தென் மாவட்டங்களில் இல்லை என்ற உணர்வு மக்களிடையே உள்ளது.
7. 2015ல் முழுக்க முழுக்க சமூக வலைத்தளங்களில் தன்னார்வலர்கள் சேர்ந்து உதவிகளை செய்தனர். ஆனால் இந்த முறை 2015 அளவிற்கு உதவிகள் கேட்கப்படவில்லை. உதவிகள் கேட்கப்பட்டாலும் அதை அமைச்சர்கள், நிர்வாகிகள் நேரடியாக தலையிட்டு தீர்த்து வருகின்றனர். அரசே நேரடியாக இவர்களிடம் உதவிகளை செய்தது. இதனால் தன்னார்வலர்கள் தேவை குறைவாக உள்ளது
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications