பெங்களூர் எல்லாம் ஓரம்போ.. இதான் சென்னை.. நேற்று நாள் முழுக்க நடந்த விசித்திரம்.. விக்கித்த மக்கள்
சென்னை: சென்னையில் 3 வாரங்களுக்கு முன்புதான் புயல், வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் சுவடே இன்னும் முடியாத நிலையில் நேற்று மக்களை வியக்க வைக்கும் சம்பவம் ஒன்று சென்னையில் நடந்தது.
சென்னையில் 3 வாரங்களுக்கு முன் மிக கனமழை, வெள்ளம் ஏற்பட்டது. 2015ஐ விட வரலாறு காணாத மழை, மக்களை அப்படியே உலுக்கி போட்ட வெள்ளம் என்று மொத்தமாக சென்னையே மூழ்கியது. ஆனால் வடிகால் வசதிகள் காரணமாக 2 நாட்களில் சென்னை அப்படியே மீண்டு எழுந்தது.

வங்கக்கடலில் கடந்த நவம்பர் 26ம் தேதி உருவான மிக்ஜாம் புயல் சென்னையை கடந்த 2 வாரங்களுக்கு முன் தாக்கியது. தமிழ்நாடு கடலோர பகுதியை நெருங்கி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியது. அதன்பின் நேற்று முதல்நாள் ஆந்திராவுக்கு சென்று நெல்லுார், மசூலிப்பட்டினம் அருகே இந்த புயல் கரையை கடந்தது.
சென்னை பாதிப்பு ஏன்?: சென்னையை இந்த புயல் நேரடியாக தாக்கவில்லை என்றாலும் சென்னைக்கு அருகிலேயே புயல் மையம் கொண்டு இருந்ததுதான் எல்லா பாதிப்புக்கும் காரணம். இந்த புயல் சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் நகர தொடங்கியது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் புயலின் வேகம் 10 கிமீதான். அதாவது 1 மணி நேரத்திற்கு 10 கிமீ தூரம் மட்டுமே நகரும்.
அதே சமயம் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வந்தது. அதாவது கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இதனால் சென்னைக்கு வடக்கு திசையில் புயல் தூரமாக சென்றாலும் கிழக்கு திசையில் அது அருகில் இருந்து கொண்டே இருந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் அந்த புயல் கிட்டத்தட்ட 17 மணி நேரம் சென்னைக்கு அருகிலேயே இருந்தது. சென்னைக்கு அருகே 100 -200 கிமீ தூரத்திலேயே புயல் இருந்தது.
அதுதான் சென்னைக்கு பெரிய சிக்கலாகி மாறியது. 100 கிமீ தூரத்தில் கிட்டத்தட்ட ஒரு நாள் முழுக்க இருந்தது. இதனால் கடுமையான மழை மேகங்களை புயல் சென்னையை நோக்கி கொண்டு வந்தது. மேலும் கடலில் புயல் நின்றதால் காற்று காரணமாக அலைகள் அதிகம் இருந்தன. இதனால் ஆற்று நீர் கடலில் சேர முடியவில்லை. ஆறு நிரம்பியதால்.. கால்வாய் நீர் எங்கும் கடலில் கலக்க முடியவில்லை. இதனால் சென்னை வெள்ள நீர் கால்வாய்கள் அமைப்புகள் எல்லாம் அப்படியே முடங்கி போனது. இதுவே தண்ணீர் நீண்ட நேரம் தேங்கி இருக்க முக்கிய காரணம் ஆகும்.
நேற்று நடந்த சம்பவம்: சென்னையில் 3 வாரங்களுக்கு முன்புதான் புயல், வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தின் சுவடே இன்னும் முடியாத நிலையில் நேற்று மக்களை வியக்க வைக்கும் சம்பவம் ஒன்று சென்னையில் நடந்தது.
நேற்று சென்னையில் நாள் முழுக்க சராசரியாக 24- 25 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவியது. அதோடு கடுமையான பனி மூட்டம், மேகமூட்டம் நிலவியது. நாள் முழுக்க சூரியன் வெளியே வரவே இல்லை. இரவிலும் இதே வானிலை நீடித்தது. இரவில் வெப்பநிலை 22 டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு கூட குறைந்தது. சென்னையில் நாள் முழுக்க வெப்பம் இல்லை, கடும் சூடு இல்லை, மழை இல்லை.. அதேபோல் humidityம் மிக குறைவாக இருந்தது.
இதனால் நாள் முழுக்க சென்னையில் மலை பிரதேசங்களில் நிலவுவது போன்ற வானிலை நிலவியது. சென்னையில் இந்த வருடத்தில் சிறப்பான வானிலை இது என்று சொல்லும் அளவிற்கு வானிலை நிலவியது. பெங்களூரில்தான் பொதுவாக இது போன்ற வானிலை நிலவும். ஆனால் அதே வானிலை நேற்று நாள் முழுக்க சென்னையில் நிலவியது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications