சென்னையில் விடாத மழை.. திடீரென மக்களுக்கு மாநகராட்சி அனுப்பிய எஸ்எம்எஸ்! வந்தது வார்னிங்.. முக்கியம்
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலருக்கும் போனில் முக்கியமான மெசேஜ் ஒன்று வந்துள்ளது.
சென்னையில் கடந்த 12 மணி நேரத்தில் சராசரியாக 9.88 செ.மீ மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 25 செ.மீ, மழை பெய்துள்ளது. கொளத்தூர் - 15 செ.மீ, மழை பெய்துள்ளது. திருவிக நகர் 15.4 செ.மீ மழை பெய்துள்ளது. அம்பத்தூர் - 14 செ.மீ மழை பெய்துள்ளது. மலர் காலனி - 13 செ.மீ மழை பெய்துள்ளது.

செம்பரம்பாக்கம் நிலை: இந்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி சமீபத்திய நிலவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இன்று காலை விநாடிக்கு 1,100 கன அடியாக இருந்த நீர்வரத்து தொடர் மழை காரணமாக 2,888 கன அடியாக உயர்ந்து உள்ளது.
ஏரியில் இருந்து தற்போது வரை விநாடிக்கு 6000 கன அடி உபரி நீர் திறக்கப்படுகிறது. 24 அடி கொண்ட ஏரியில் நீர் மட்டம் 22.41 அடியை எட்டியுள்ளது.
புழல் ஏரியில் இருந்து 1000 கனஅடி உபரிநீர் திறக்கப்படுகிறது. சென்னை அடுத்த புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு 1000 கனஅடியாக அதிகரித்து உள்ளது. நேற்று முதற்கட்டமாக வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்:
▪️ செம்பரம்பாக்கம் - 89.33%
▪️புழல் - 93.15%
▪️பூண்டி - 64.44%
▪️சோழவரம் - 78.72%
▪️கண்ணன்கோட்டை - 93% உள்ளது.
சென்னை மக்களுக்கு வந்த மெசேஜ்; சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலருக்கும் போனிற்கு முக்கியமான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதன்படி செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 30.11.23, 8am விநாடிக்கு 6000கனஅடிநீர் வெளியேறுவதால் அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று மெசேஜ் வந்துள்ளது.
சென்னை மக்களுக்கு வந்த மெசேஜ்; சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் மக்கள் பலருக்கும் போனில் முக்கியமான மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதன்படி செம்பரம்பாக்கம் நீர்த்தேக்கத்திலிருந்து இன்று 30.11.23, 8am விநாடிக்கு 6000கனஅடிநீர் வெளியேறுவதால் அடையாற்றின் கரையோரம் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படிகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், என்று மெசேஜ் வந்துள்ளது.
அது போன்ற விஷயங்களை தடுக்க வேண்டும் என்பதற்காக முறையாக மக்களுக்கு மெசேஜ் அனுப்பி சென்னையில் செம்பரம்பாக்கம் உள்ள ஏரிகளின் நிலை அப்டேட் செய்யப்படுகிறது.
வானிலை நிலவரம்: கடந்த 27-11-2023ம் தேதி காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையில் நகர்ந்து 28-11-2023 காலை 08.30 மணி அளவில் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதுதான் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலிமை அடைந்தது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 30-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும். இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெற கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் மழை தீவிரமாக பெய்து வருகிறது. நேற்று 20 இடங்களுக்கும் மேற்பட்ட பகுதிகளில் 100 செமீக்கும் அதிகமாக மழை பெய்தது. மழையினால் சரிந்த 12 மரங்களும் துரிதமாக அகற்றப்பட்டு உள்ளது என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் மூலம் சுரங்கப்பாதைகளில் தொடர் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னை மழை: நேற்று இரவு மழை பெய்த மழை காரணமாக சென்னையில் தேங்கிய தண்ணீர் உடனே வடிந்து உள்ளது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications