தமிழகத்தில் வழக்கத்தை விட இந்தாண்டு கொளுத்தும் வெயில்! மொத்தம் 2 காரணங்கள் இருக்கு- ஓ இவ்வளவு இருக்கா
டெல்லி: கடந்த காலங்களைக் காட்டிலும் இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெப்பம் மிக மோசமாக இருக்கும் நிலையில், அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
பொதுவாகக் கோடைக் காலங்களில் வட இந்தியாவில் பல பகுதிகளில் தான் வெப்ப அலை பாதிப்புகள் ஏற்படும். ஆனால் இந்தாண்டு தென்னிந்தியாவிலும் வெப்பம் மோசமாகவே இருக்கிறது. இதற்கு 2 காரணங்களை ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

எங்கு ஏற்படும்: மத்திய, வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவில் குஜராத் முதல் மேற்கு வங்கம் இடையேயான பகுதிகளில் தான் இந்த வெப்ப அலை ஏற்படும். இதை கோர் ஹீட்வேவ் மண்டலம் என்று அழைப்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் முதல் ஜூன் வரை கோடைக் காலத்திலும், அரிதாக ஜூலை மாதத்திலும் வெப்ப அலை ஏற்படும்..
ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா மாநிலங்களில் இவை பொதுவாக ஏற்படும். மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளும் வெப்ப அலை ஏற்படும். இவை தவிர தென் இந்தியா எனப் பார்க்கும் போது ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் வெப்ப அலைக்கு வாய்ப்புகள் அதிகம்..
ஆனால், இந்த முறை தமிழ்நாட்டிற்குக் கூட வானிலை மையம் பல சமயம் வெப்ப அலை எச்சரிக்கையை விடுத்துள்ளது. தமிழ்நாடு இந்த லிஸ்டில் வர என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்..
முதல் காரணம்: முதல் காரணம் எல் நினோ நிகழ்வு.. இந்த 2024இல் தான் எல் நினோ தொடங்கி இருக்கிறது. பசிபிக் பெருங்கடலில் மேற்பரப்பு நீர் வெப்பமாகும் வானிலை நிகழ்வு தான் எல் நினோ என்று அழைக்கப்படுகிறது. இதனால் உலகின் பல பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும். கடந்த ஜூன் 2023இல் இந்த எல் நினோ உருவானது. பொதுவாகவே எல் நினோ தொடங்கும் ஆண்டுகளில் வெப்பம் அதிகமாக இருக்கும். வெப்ப அலைகளும் தொடர்ச்சியாக ஏற்படும். கடந்த காலங்களிலும் இதுபோலவே நடந்துள்ளது. இது ஒரு காரணம்.
இரண்டாவது காரணம்: அடுத்து தெற்கு தீபகற்பம் மற்றும் தென்கிழக்கு கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து ஆண்டிசைக்ளோன் ஏற்படுவதும் ஏப்ரல் மாதம் வெப்பம் அதிகரிக்க ஒரு காரணமாக இருக்கிறது. சுமார் 3 கி.மீ உயரத்தில்.. 1,000 முதல் 2,000 கி.மீ நீளம் வரை நீண்டு இருக்கும் இந்த எதிர்ச்சுழல் அமைப்பு தனக்குக் கீழே இருக்கும் காற்றைப் பூமியை நோக்கித் தள்ளும். இதனால் பூமியின் மேற்பரப்பில் வெப்பம் அதிகரிக்கிறது..
மேலும், கடலில் இருக்கும் காற்று பூமியை நோக்கி வரும் போது அவை வெப்பத்தைக் குறைக்கும். ஆனால், இந்த ஆண்டிசைக்ளோன் அமைப்புகள் காற்றைக் கீழ் நோக்கித் தள்ளுவதால் நிலத்திற்கு மேல் இருக்கும் காற்று கடலை நோக்கிச் செல்கிறது. இது கடலில் இருக்கும் குளிர்ந்த கடல் காற்று நிலத்தை நோக்கி வருவதைத் தடுக்கிறது.
பாதிப்பு அதிகம்: எல் நினோ மற்றும் ஆண்டிசைக்ளோன் அமைப்புகள் சேர்ந்து தான் ஏப்ரல் மாதத்தில் வெப்பம் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. இதன் காரணமாகவே மேற்கு வங்காளம், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மட்டுமின்றி தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் வெப்ப அலை ஏற்படுகிறது. இந்த வெப்ப அலைகளால் ஒடிசா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட தென்கிழக்கு கடற்கரைப் பகுதிகள் மற்றும் கர்நாடகா, கேரளா, சிக்கிம், பீகார், ஜார்கண்ட் மற்றும் கங்கை மேற்கு வங்கம் தான் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுவாகக் கேரளா, சிக்கம் போன்ற பகுதிகளில் வெப்பம் அதிகளவில் இருக்காது. ஆனால், இந்த ஆண்டு அங்குக் கூட வெப்ப அலை ஏற்பட்டுள்ளது என்றால் நிலைமை எந்தளவுக்கு மோசமாக இருக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications