மே மாசம் கூட பெய்ததே! இந்த ஜூலை, ஆகஸ்ட்டில் வெப்பச்சலனம் மழை எங்கே? ஆய்வாளர் கூறுவது என்ன?
சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் வெப்பச்சலன மழை இந்த ஆண்டு பெய்யாததற்கு, காற்று வீசுவதில் நிலவும் மாறுபாடே காரணம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் நீரியல் வல்லுநர்களும் தெரிவித்துள்ளார்கள்.
தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பயனை கொடுக்கும். அது போல் தமிழகத்தில் குமரி எல்லையை ஒட்டிய பகுதிகள், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் ஆகியவற்றில் மழையை கொடுக்கும்.

பரவலாக தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழைதான் கைகொடுக்கும். எனினும் தமிழகத்தில் உள்மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் வெப்பச்சலன மழை பெய்யும். இதுதான் கோடைக்கு பிறகு கிளம்பும் வெப்பம் தணிய காரணமாக அமையும். இதுதான் தமிழகத்தின் பேட்டர்ன்.
தமிழகத்தில் இந்த ஆண்டு வித்தியாசமாக கோடை காலமான மே, ஜூன் மாதங்களில் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலில் இருந்து தப்பினோம். அந்த வகையில் ஜூலை, ஆகஸ்ட் மாதம் பெய்யும் வெப்பச்சலன மழை அந்தளவுக்கு கை கொடுக்கவில்லை. வளி மண்டல மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி காரணமாக பெய்து வரும் மழையே தமிழகத்திற்கு கை கொடுக்கிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியிருப்பதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் மேல் கருமேக கூட்டங்கள் அதிகம் காணப்படுகின்றன. நிலத்தில் இருந்து வெப்பம், இந்த கருமேக கூட்டங்களை நோக்கி சென்று அதை குளிர்வித்தால் அப்போது வெப்பச்சலன மழை பெய்யும். ஆனால் தற்போதைய சூழலில் காற்று வீசுவதிலேயே மாறுபாடு ஏற்பட்டுள்ளது.
நிலத்தில் இருந்து வெப்பமான காற்று மேக கூட்டங்கள் வரை செல்ல முடியவில்லை. இதனால் கருமேகங்கள் கலைந்து விடுகின்றன. வெப்பச்சலனமும் ஏற்படுவதில்லை. இவ்வாறு தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளதாவது: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஆக. 24 முதல் 28 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப்பகுதிகளில் இன்றும் நாளையும் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆக. 24 முதல் 26 வரை மன்னார் வளைகுடா மற்றும் தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகளில் இன்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். நாளை தெற்கு - மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த நாட்களில் இந்த பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications