இதுதான் இனி டிரெண்ட்.. டமால் டுமீல்.. சென்னைக்கு தமிழ்நாடு வெதர்மேன் பரபரப்பு வார்னிங்.. கவனம்
சென்னை: தமிழ்நாட்டில் மழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தமிழ் நாட்டில் 10 மாவட்டங்களில் லேசான மழை பெய்ய போவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மட்டுமல்ல அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதன்படி ஜூலை 12ம் தேதி வரை மழை வெளுக்க போகிறது. அடுத்த 3 நாட்களுக்கு நீலகிரி, கோவை, தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. அதேபோல் திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். மேலும் நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இந்திய கடலின் மேற்கு பகுதியில் திடீரென உயர் மட்டத்தில் மேடன்-ஜூலியன் அலைவு ஏற்படுகிறது. இதுதான் இந்த மழைக்காலத்தில் அதீத மழைக்கு காரணமாக அமைந்துள்ளது. இந்த மாற்றம் காரணமாக அடுத்த 2 வாரங்களுக்கு நாடு முழுக்க பரவலாக மழை பெய்யும். மழைக்காலம் லேட்டாக தொடங்கியதால் ஏற்பட்ட மழை இழப்பை சரி செய்யும் விதமாக நாடு முழுக்க மழை பெய்யும்.
வங்கக்கடலில் நிலவும் மாற்றங்களும் கூட இந்த சூழ்நிலைக்கு தகுந்தபடியே இருக்கும். கடந்த காலங்களில் பெரும்பாலும் வட தமிழ்நாட்டின் அட்சரேகைக்கு மேலே பருவமழை காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் போது அது இடியுடன் கூடிய மழையாக பெய்யும், இது பருவமழையை பொறுத்து ஓரிரு நாட்கள் நீடிக்கும். சென்னையை பொறுத்தவரை இன்றில் இருந்து மழை பெய்யும். மற்றபடி தமிழ்நாட்டில் நீலகிரி, மேற்கு தொடர்ச்சி மழை பகுதிகள், கோவையில் இன்று கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள வானிலை அறிவிப்பில், ஜம்மு, ஹிமாச்சல் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 200 மிமீ மற்றும் 300 மிமீ அளவுகளில் மழை மிக கடுமையாக பெய்து வருகிறது. இன்றும் இதேபோல் 200-300 மிமீ மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன .
இதனால் மணாலி-தரம்சாலா போன்ற இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்று காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டில் இன்று டமால் டுமீல் என்று மழை பெய்யும். அடுத்த சில நாட்களுக்கு இதே நிலை தொடரும். காலையில் வெயிலாக இருக்கும்.
அதன்பின் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்யும். இதுதான் வடக்கு தமிழ்நாட்டில் நிலவப்போகும் வானிலை. காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டில் மட்டுமின்றி ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலையிலும் இதே வானிலைதான் நிலவும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கோடை வெயில் முற்றிலுமாக முடிவிற்கு வந்துள்ள நிலையில் தமிழ்நாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக மழை காலம் தீவிரம் அடைய தொடங்கி உள்ளது. கடந்த மாதங்களில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த கடுமையான வெயில் ஒரு வழியாக முடிவிற்கு வந்துள்ளது. வெயிலின் தாக்கம் குறைந்து கொஞ்சம் கொஞ்சமாக மழை பெய்ய தொடங்கி உள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications