சென்னையில் மழை ஓய்ந்ததா? இன்றைய நிலவரம் என்ன தெரியுமா? ஆஹா.. திரும்பவுமா.. வானிலை அலர்ட்
சென்னை: மிக்ஜாம் புயல் நேற்று ஆந்திர மாநிலத்தில் கரையை கடந்துவிட்டது. அதோடு சென்னையில் நேற்று மழை பெய்யவில்லை. இந்நிலையில் தான் இன்று சென்னையில் மழை பெய்யுமா? இல்லையா? சென்னையின் வானிலை நிலவரம் என்னவாக இருக்கும்? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் டிசம்பர் 3 மற்றும் டிசம்பர் 4ம் தேதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது. காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் கனமழை என்பது தீவிரமாக பெய்தது.

இந்த 4 மாவட்டங்களும் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சென்னையில் பெய்த கனமழையால் மொத்த நகரமே தண்ணீரில் மூழ்கியது. புயல் தற்போது கரையை கடந்துள்ளது. முன்னதாக நேற்று சென்னையில் பல இடங்களில் மழை என்பது இல்லை.
இருப்பினும் முன்பு பெய்த கனமழையின் காரணமாக சென்னையின் பல சாலைகளில் மழைநீர் தேங்கி உள்ளது. குடியிருப்புகளை சூழ்ந்த நீர் இன்னும் வெளியேறவில்லை. இதனால் மழை நின்றாலும் கூட பொதுமக்கள் தொடர்ந்து வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் களமிறங்கி மீட்பு பணி, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை வரை சில இடங்களில் தண்ணீர் என்பது வெளியேறவில்லை. தண்ணீரை முழுவதுமாக வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் சென்னையின் இன்றைய வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டு இருந்தது. இதுதொடர்பாக நேற்று மதியம் 1.45 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வானம் ஓளவு மேகமூட்டத்துடுன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை என்பது 29-30 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை என்பது 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்'' என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்மூலம் சென்னையின் சில பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு இன்று மற்றும் நாளைய தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் வரும் 8 ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை ம்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 9ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதகிளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications