ராமர் பாலம் நோ- மீண்டும் வலுக்கும் சேது சமுத்திர திட்டம்- அப்படின்னா என்ன? தமிழகத்துக்கு என்ன பலன்?
சென்னை: சேது சமுத்திரத் திட்டம் அல்லது சேதுக் கால்வாய் திட்டம் என்பது தமிழகத்தில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. 100 ஆண்டுகளுக்கும் மேலாக பேசப்பட்டு வருகிறது சேது கால்வாய் திட்டம். ராமர் பாலம் என்ற பெயரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது இத்திட்டத்தை மீண்டும் செயல்படுத்த தமிழகம் குரல் கொடுத்து வருகிறது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தில் ராஜ்யசபாவில் மத்திய அரசு ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. மன்னார் வளைகுடாவில் இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கக் கூடிய சுண்ணாம்பு திட்டுகள்/ பாறைகள் என்பவை ராமரால் கட்டப்பட்ட பாலம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என கூறியது.
இந்த சுண்ணாம்பு பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் போல அமைத்தால் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்றதாக இருக்கும். இந்த திட்டம்தான் சேதுக் கால்வாய் திட்டம் என்பதாகும்.

அதாவது சமுத்திர திட்டம் என்பது பாக் ஜலசந்தியும் மன்னார் வளைகுடாவும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் / ராமர் பாலமாக சொல்லப்பட்ட பகுதியின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். ஆங்கிலேயேர்களால் 1860ம் ஆண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பல மடங்கு உயரும் என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.
இந்திய தீபகர்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியாக கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. சேது சமுத்திர கால்வாய் அமைந்தால் கப்பல்கள் செல்ல வேண்டிய தூரம் குறையும்.
தூத்துக்குடி துறைமுகத்திலிந்து சென்னை துறைமுகத்திற்குச் சென்றால் 434 மைல் தூரம் மிச்சப்படும். தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் சென்றால் 376 மைல் தூரம் மிச்சப்படும். தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா துறைமுகம் சென்றால் 340 மைல் தூரம் மிச்சப்படும்.
இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலில், எரிபொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவில் அன்னியச் செலாவணிச் செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.
இந்த திட்டத்தை செயல்படுத்தினால் இந்துமகா சமுத்திரமும் வங்க கடலும் இணைய வாய்ப்புள்ளது. மேலும் இந்திய எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை இல்லை. என்ற குறை நீங்கிவிடும்.
தற்போது கப்பல்கள் யாவும் இலங்கையைச் சுற்றி செல்கின்றன. இதனால் புயல் அபாயங்களில் சிக்கிக் கொள்ள நேர்கிறது. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால் புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.
இந்த கால்வாய் வெட்டப்பட்டால் இந்தியாவின் தென்பகுதியில் அன்னிய சக்திகள் ஊடுருவாமல் இது ஓர் அரணாக விளங்கும்.
மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடலுக்குச் சென்றுவர தடையின்றி வழி கிடைக்கும். கால்வாயில் கப்பல்கள் தவிர மீனவர்களின் படகுகளும் செல்ல அனுமதிக்கப்படும்.
தமிழக கடலோரப் பகுதிகளில் தொழில வளர்ச்சி பெருகும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். எந்த ஒரு பகுதியும் தொழில் வளர்ச்சி அடையும்பொழுது அதனால் உடனடியாக பயன் பெறப்போவது அப்பகுதி மக்கள்தான். அந்த வகையில் சேது கால்வாய் திட்டத்தால் கடலோர மாவட்ட மக்கள் பெரிதும் பயன்பெறுவர். இதில் மீனவர்களும் அடங்குவர்.
கால்வாய் திட்டம் அதைச் சார்ந்து சிறு திட்டங்கள் ஆகியவற்றில் ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 50 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலையும் கிடைக்கும்.
இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும். இதனால் எல்லா துறைகளிலும் தொழில் உற்பத்தியும் வேலை வாய்ப்புகளும் பெருகும்.
பல்வேறு வகைகளில் அன்னிய செலாவணி மீதமாகும். அன்னிய செலாவணி வருவாயும் அதிகாரிக்கும்
இந்திய கிழக்கு கடற்கரை துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி இறக்குமதியில் சரக்கு போக்குவரத்து செலவு குறையும். எனவே உலக சந்தையில் நம்முடைய ஏற்றுமதிப் பொருட்கள் போட்டிபோட முடியும். இறக்குமதியாகும் கச்சாப் பொருட்களின் விலை குறையும் என்பதால் உற்பத்தி பொருட்களின் விலையும் குறையும்.
நிலம் வழியாக செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு, உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருட்களைக் கிழக்கு கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.
சேதுக் கால்வாய் திட்டமும தூத்துக்குடி துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி முழு அளவு அதிகரிக்கும். அதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநர், காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுவதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.
மீனவர்களுக்கு நேரடியாக பயன்படும் வகையில் தூத்துக் குடிக்கும் நாகப்பட்டினத்துககும் இடையில் மீன்பிடி துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.
இந்த கால்வாயின் மூலம் தமிழகத்தில் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, இராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.
தொண்டியில் 16 கோடி செலவில் சிறு கப்பல்கள் தங்கும் தளம் முத்துப்பேட்டையில் சிறு சிறு மீன்பிடித் துறைமுகங்கள் தனுஷ்கோடியில் 16 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் மீனவர்களின் வளர்ச்சிக்காக அமையும்.
இராமநாதபுரத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும். புதியதாக மீன்பிடித் துறைமுகங்கள் உருவாவதால் அவற்றைச் சார்ந்து குளிர்பதன சேமிப்பு கிடங்குகள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமையும். அதனால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.
தூத்துக்குடி துறைமுகத்தை எடுத்துக் கொண்டால் அதனால் மிகுந்த பயன்பெற்றவர் மீனவ இனத்தவர்தான். அங்குள்ள முகவர்களில் பெரும்பாலோர் மீனவ இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். 30 ஆண்டுகளுக்கு முன் முகவர்களாக இருந்தவர்கள் இன்று முதலாளிகளாக இருக்கிறார்கள். அதைப்போல சேது கால்வாய் திட்டத்தால் இன்று சாதாரணமாய் மீன்பிடித் தொழிலில் இருக்கும் கடலோர மாவட்டங்களைச் சார்ந்த பல மீனவர்கள் தொழிலதிபர்களாக மாறும் வாய்ப்பு ஏற்படும்.
சேது சமுத்திரக் கால்வாய் இந்திய இலங்கை கடல் எல்லையைச் சார்ந்து அமையப் போவதால் எல்லை தெரியாமல் மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் சென்று அங்குள்ள கடற்படையினரிடம் அவதிக்குள்ளாகும் நிலை மாறும்.
இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பிற பகுதிகளிலிருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது. (நன்றி:https://kalaignar.dmk.in/)
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications