வாஸ்து: இடம் மாறும் சங்கர மட நுழைவாயில்
காஞ்சிபுரம்:
சங்கர மடத்தின் முன் பகுதி வாஸ்து சாத்திரப்படி திருத்தி அமைப்பதற்காகஇடிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலைக்குப்பின்னர் சங்கர மடம் படாதபாடு பட்டு விட்டது.இரு சங்கராச்சாரியார்களும் சிறைக்குச் சென்று வந்து விட்டனர். சங்கர மடம் குறித்துபோலீசார் சில உண்மைகளையும் பல பொய்களையும் பரப்பிவிட்டு பரபரப்பைஏற்படுத்தினர்.
இப்போது மடத்துக்கு பக்தர்கள வருகை முன்பு போல இல்லை. குறிப்பாகஜெயேந்திரரால் பல வகைகளிலும் பலன் பெற்ற விஐபிக்கள் இப்போது அந்தப் பக்கம்வருவதையே அடியோடு நிறுத்திக் கொண்டுவிட்டனர்.
இந் நிலையில் சங்கர மடத்தில் வாஸ்து குறைபாடுகள் இருக்கிறதா என்றுஆராயப்பட்டது.
இதில் சங்கர மட நுழைவாயில் சரியில்லை என்று வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்தெரிவித்தனர். அதன்படி நுழைவாயிலை வடக்கு பக்கம் இல்லாமல் கிழக்கு திசையில்வைக்க முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மடத்தின் நுழைவாயிலில் கிழக்கு திசையில் இருந்த கடைகளைசங்கர மடம் காலி செய்தது.
இதையடுத்து இப்போது அதை இடிக்கும் பணி தொடங்கியது. இந்த வேலைக்குமுன்பாக ஒரு சேவலை பலியிட்டு பணிகளைத் தொடங்கினர்.
நுழைவாயில் இடம் மாறபோவதை நாம் முன்பே கூறியது நினைவுகூறதக்கது.












Click it and Unblock the Notifications