பலாத்காரம் செய்யும் முன்பு பெண்களை பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்திய ஐஎஸ் தீவிரவாதிகள்
லண்டன்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் முன்பு அவர்களை பிரார்த்தனை செய்யுமாறு வற்புறுத்தியது தெரிய வந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் பெண்களை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்வதுடன் அவர்களை செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள். அதிலும் குறிப்பாக யசிதி இன பெண்களை தான் அதிக அளவில் கடத்தி செக்ஸ் அடிமைகளாக வைத்துள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பியுள்ள ஈராக்கின் சிஞ்சாரைச் சேர்ந்த யசிதி இன பெண் நாதியா முராத்(21) கூறுகையில்,

தீவிரவாதிகள்
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எங்கள் கிராமத்திற்குள் புகுந்து குழந்தைகள், முதியவர்கள், வாலிபர்களை கொலை செய்தனர். மறுநாள் அவர்கள் வயதான பெண்களை கொலை செய்துவிட்டு நான் உள்ளிட்ட இளம்பெண்களை மொசுல் நகருக்கு கடத்திச் சென்றனர்.

செக்ஸ் அடிமைகள்
மொசுல் நகரில் ஆயிரக்கணக்கான யசிதி இன பெண்களை தீவிரவாதிகள் செக்ஸ் அடிமைகளாக விற்பனை செய்தனர். அங்கு பல தீவிரவாதிகள் என் மீது விருப்பம் காட்டினர்.

தீவிரவாதி
பார்க்க சிறியதாக இருந்த தீவிரவாதி என்னை செக்ஸ் அடிமையாக அழைத்துச் சென்றார். நான் பார்த்ததிலேயே மோசமான நபர் அவர் தான். அந்த தீவிரவாதி என்னையும், பிற பெண்களையும் பலாத்காரம் செய்யும் முன்பு பிரார்த்தனை செய்யுமாறு கட்டாயப்படுத்தினார்.

விலங்குகள்
விலங்குகளை விட எங்களை மோசமாக நடத்தினார்கள். பெண்களை கும்பல், கும்பலாக பலாத்காரம் செய்தனர். நினைத்துக் கூட பார்க்க முடியாததை எல்லாம் அவர்கள் எங்களுக்கு செய்தார்கள்.

தீவிரவாதம்
இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவள் நான். அனைத்து குற்றங்களையும் இஸ்லாத்தின் பெயரால் செய்கிறார்கள்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications