தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரனம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு
சென்னை: தவெக அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆதரவு அளித்த அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதை உடனடியாக சபாநாயகர் அவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அந்த தொகுதிகளை காலியானதாக அன்றே அறிவிப்பும் செய்துவிட்ட நிலையில், இன்றைக்கு சம்பந்தப்பட்ட 4சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறைக்கு உகந்ததாக தெரியவில்லை என்று சசிகலா கூறியுள்ளார்.
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "தமிழக சட்டமன்ற சபாநாயகர், புதியதாக அமைந்த அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் மீது இன்றைக்கு நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவதால் எந்தவித பயனும் இல்லை. இது தமிழக சட்டமன்ற மாண்புகளை காப்பாற்றிட எவ்வாறு உறுதுணையாக இருக்கும் என்ற கேள்வி அனைவரிடமும் எழுகிறது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக சட்டமன்றம் இந்திய ஜனநாயக வரலாற்றில் நூற்றாண்டைக் கடந்த பாரம்பரியமும், சமூக மாற்றத்திற்கான பல முன்னோடிச் சட்டங்களை இயற்றிய பெருமையும் கொண்டது. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலம் முதலே தனித்து நின்று, முக்கியத்துவம் வாய்ந்த இடமாகத் திகழ்ந்தது நம் தமிழகம். அரசியல் சலசலப்புகள், ஆட்சிக் கலைப்புகள், குடியரசுத் தலைவர் ஆட்சி என எத்தனையோ சிக்கல்களைக் கடந்து, தமிழக சட்டமன்றம் கடந்துவந்த பாதைகள் கரடு முரடானதாக இருப்பினும், பல அரிய வியத்தகு சிறப்புகளை உள்ளடக்கியது.
கடந்த 1952ஆம் ஆண்டு முதல் பல சிறப்பு வாய்ந்த சபாநாயகர்களை தமிழக சட்டமன்றம் கண்டு இருக்கிறது. அதாவது, திரு.ஜெ.சிவசண்முகம் பிள்ளை முதல் பல திறமைவாய்ந்த சபாநாயகர்கள் அலங்கரித்த இருக்கைதான், தமிழக சட்டமன்ற சபாநாயகரின் இருக்கை. ஒரு சபாநாயகர் அனைவருக்கும் பொதுவானவராக இருக்கவேண்டும். இந்த பதவி மிகவும் மதிப்புமிக்க பல வரலாற்று சாதனைகளை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சட்டமன்ற சபாநாயகர் அவர்கள் தமிழக சட்டமன்ற பேரவையின் மாண்பை, அதன் மதிப்புமிக்க சிறப்பை தொடர்ந்து காப்பாற்றிடவேண்டும். புதிதாக அமைந்த அரசுக்கு சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் ஆதரவு அளித்த அதிமுகவை சேர்ந்த 4 சட்டமன்ற உறுப்பினர்கள் கடந்த மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் தங்களது பதவியை ராஜினாமா செய்து, அதை உடனடியாக சபாநாயகர் அவர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் சம்பந்தப்பட்ட அந்த தொகுதிகளை காலியானதாக அன்றே அறிவிப்பும் செய்துவிட்ட நிலையில், இன்றைக்கு சம்பந்தப்பட்ட 4சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்புவது நடைமுறைக்கு உகந்ததாக தெரியவில்லை. இது எத்தகைய பலனை அளிக்கும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதுபோன்ற விசயங்களை தகுந்த சட்ட வழிகாட்டுதலுடன் அணுகுவதுதான் சரியான நடவடிக்கையாக அமையும். இது போன்ற நடவடிக்கைகள் தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான ஒரு முன்னுதாரணமாக அமைத்துவிடக்கூடாது என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு சசிகலா கூறியுள்ளார்.
-
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
அதிமுகவில் பலரும் தவெகவிற்கு தாவும் நிலையில்.. திமுகவில் இருந்து ஏன் போகவில்லை? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
அதிகரித்த மின்வெட்டு! அவதியான மக்கள்! வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரை அரசு! விளாசிய எடப்பாடி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அதிமுக உடன் இணைகிறதா அமமுக? காட்டுத்தீயாகப் பரவும் தகவலுக்கு டிடிவி தினகரன் விளக்கம்! -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அவரா? பெரிய தலைக்கட்டாச்சே! தவெகவுக்கு தாவும் ஜெயக்குமார்! எடப்பாடி அடுத்த தலைவலி! பரபர பாலிடிக்ஸ் -
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை














Click it and Unblock the Notifications