இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்
கோவை: இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், "கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது" என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் " பி டீம்" என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார் என்று பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், இந்துக்களின் கைகளில் உள்ள கயிறு மட்டும் ஏன் எல்லோரது கண்களையும் உறுத்துகிறது? கல்விக்கூடங்களில் மதம் சார்ந்த அடையாளங்களை அனுமதிக்க மாட்டோம் என்று வீர வசனம் பேசிய கல்வி அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள், "கையில் எந்தக் கயிறும் கட்டக் கூடாது" என்று இறுதியில் தனது இந்து மத வெறுப்பைக் கக்கியதன் மூலம் தாங்கள் திமுகவின் " பி டீம்" என்பதை மீண்டும் நிரூபித்துவிட்டார்.

பல நூறு ஆண்டுகளாக இந்துக்கள் பின்பற்றி வரும் மத நம்பிக்கைகளில் மூக்கை நுழைக்க எந்த அரசுக்கும், கட்சிக்கும், அமைப்பிற்கும் உரிமையில்லை என்ற அடிப்படை நாகரிகத்தை கல்வி அமைச்சர் தெரிந்து கொள்ள வேண்டும். சுத்தமான குடிநீர், போதிய கழிவறைகள், தரமான கட்டிடங்கள் இன்றி முடங்கிக் கிடக்கும் அரசுப் பள்ளிகளை தெப்புத் தேற்றுவது எப்படி என்று ஆராயாமல், இந்து மாணவர்களின் அடையாளங்களை அழிப்பதில் ஆர்வத்துடன் செயல்படுவது தான், தவெகவின் அனைவருக்குமான அரசியலா? "மதச்சார்பின்மை" என்ற போர்வையில் இந்து மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மட்டும் தவெக அரசு பறிக்க நினைப்பது கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் தைரியத்தில் இந்துக்களின் மத அடையாளங்களை அழிப்பதில் மட்டுமே முழுக் கவனம் செலுத்திக் கொண்டிருந்தால் ஆட்சிக்கு வந்த வேகத்தை விட அதிவேகத்தில், முதல்வர் விஜய் அவர்கள் தனது அதிகாரத்தை இழக்க நேரிடும்!" இவ்வாறு வானதி சீனிவாசன் தனது பதிவில் கூறியுள்ளார்.
முன்னதாக சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் மாணவர்களின் மனநலனை பாதுகாப்பது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டு பொறுப்பு. மெல்ல கற்கும் மாணவர்களை ஒதுக்காமல், தனித் திறமைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்த வேண்டும்.
பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை சீராக பராமரிக்க வேண்டும். பிரச்சனை வந்த பின் சரி செய்வதை விட, பிரச்சனை வராமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும். அதேபோல் மாதிரி பள்ளிகளில் உணவு, மனநலம், உட்கட்டமைப்பு ஆகிய மூன்றையும் தரமாக பேணி பாதுகாக்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க ஆலோசித்து வருகிறோம்.
அதேபோல் சாதி, மத அடையாளங்களோடு (சாதிய அடையாளை குறிக்கும் கயிறுகள் கட்டி) கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது. பிரிவினையை தூண்டக் கூடிய வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை. தமிழக பள்ளி வளாகங்களில் சமூக நீதி, அறிவியல் மற்றும் கல்வி மேம்பாடு ஆகிய மூன்றுக்கும் மட்டுமே இடம் உண்டு. பிரிவினையையோ, வேற்றுமையையோ வளர்க்கும் எதற்கும் இங்கு இடம் கிடையாது.
மாணவர்களின் குற்ற மனநிலையை மாற்றுவதற்கும், அவர்களை நல்வழிப்படுத்துவதற்கும் பள்ளிக் கல்வித்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது. மூடநம்பிக்கைகளுக்கோ அல்லது அறிவியலுக்கு புறம்பான காரியங்களுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இனி தன்னம்பிக்கை, பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
முன்னாள் மாணவர்களை பள்ளிகளின் தூதர்களாக மீண்டும் அழைத்து வரத் திட்டமிடப்பட்டுள்ளது. மாணவர்களிடம் தங்களின் கடந்த கால கஷ்டங்களையும், அதனை கடந்து எப்படி சாதனையாளர்களாக உயர்ந்தார்கள் என்பதையும் பகிர்ந்து கொண்டு பெரிய உத்வேகத்தை அளிப்பார்கள். மாணவர்களின் போதையின் பாதைக்கு சென்றுவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அரசு தயாராக உள்ளது" இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தார். இதில் கயிறுகள் கட்டி வரக்கூடாது என்ற அமைச்சரின் பேச்சுக்குத்தான் வானதி சீனிவாசன் எதிர்வினையாற்றி உள்ளார்.
-
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
234 மாவட்ட செயலாளர்.. விஜய் எடுக்கும் புதிய வியூகம்.. நிர்வாகிகளுக்கு போன மெசேஜ்.. பின்னணி என்ன? -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
காத்திருந்து காத்திருந்து..பனையூரில் பாழாய்ப் போன கனவுகள்! பதவி இல்லாமல் பரிதவிக்கும் ’தாவல்’ தலைகள்! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம்














Click it and Unblock the Notifications