For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

"12" இருக்கட்டும்.. முதலில் திமுகவை ஜெயலலிதா பிளக்காமல் இருக்கட்டும்"

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் பெரும்பான்மைக்கு கூடுதலாக 12 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். எனவே அவர்களைத் தக்க வைப்பது கடினம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது குறித்து மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் கருத்து ஒன்றை தனது பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

அந்தக் கருத்து:

பெரும்பான்மையை விட 12-ஐ மட்டுமே கூடுதலாக வைத்திருக்கும் அதிமுக அதன் எம்எல்ஏக்களை தக்க வைப்பது கடினமான செயல் - திமுக தலைவர் கருணாநிதி

A senior journalist's view on Karunanidhi's interview

இப்படித்தான் 1977 ல் எம்ஜிஆர் ஆட்சியை பிடித்தபோது இஷ்டத்திற்கும் பேசினார்.. அப்போது திமுகவுக்கு 48 இடங்கள்.

அடுத்த தேர்தலில் திமுகவின் 48ல்11 குறைந்து 37 ஆனது. 1984 தேர்தலில் மேலும் 13 காணாமல்போய் 24 ஆனது..அப்புறம் பி.எச்.பாண்டியன் புண்ணியத்தில் 24லும் பாதியானது.

இப்போது மீண்டும் பெரும்பான்மையைவிட தம்மாத் துண்டே அதிகம் என்று கருணாநிதி பேச ஆரம்பித்துள்ளார். இதுக்கு பேருதான் சொந்தக்காசில் சூன்யம் வைத்துக் கொள்வது..

சாதாரணமாகவே அவ்வளவு ஆட்டம் ஆடுவார் ஜெயலலிதா. இப்போது சலங்கையை வேறு கட்டிவிட்டுள்ளார்..

மந்திரி பதவி அப்பால..வாரிய தலைவர் பதவி இப்பால.. என்று திமுகவை மக்கள் திமுக என ஜெயலலிதா பிளக்காமல் இருக்க விரும்பி வைப்போம்..

English summary
A senior journalist has expressed his views on DMK president Karunanidhi's interview to a English daily.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X