For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தல் ஆணையத்திலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள்: கருணாநிதி கடும் தாக்கு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக தேர்தல் ஆணையத்தின் கண்ணியத்தின் மீது மதிப்பில்லாமல் போய்விட்டது என இன்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் கருணாநிதி குற்றம்சாட்டினார். தேர்தல் ஆணையம் எவ்வளவு புனிதமானது, அதை யாரும் அசைக்க முடியாது என்பதற்கு மதிப்பில்லாமல் போகும் அளவுக்கு தேர்தல் ஆணையத்திலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்றும் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் நேற்று நடைபெற்ற 93 வது பிறந்தநாள் விழாவில் திமுக தலைவர் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று யாரோ முயற்சி செய்து வருகிறார்கள் 50 ஆண்டுகளாக எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாத இயக்கமாக திமுக இருப்பதாக கூறினார்.

என்னை இங்கே பாராட்டி பேசியவர்கள், நான் இன்னும் சில காலம் வாழ வேண்டும் என்று வாழ்த்தினார்கள். இந்த நாட்டில் இவ்வளவு பிற்போக்கு தன்மை ஏற்பட்டுள்ளது. கொண்ட கொள்கைகள் குழிதோண்டி புதைக்கப்பட்டு விட்டன. இதையெல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு இன்னும் சில காலம் வாழ வேண்டுமா என்ற கேள்வி என்னை துளைத்தெடுக்கிறது.

என் நண்பர்களும், மற்றவர்களும் விரும்பும் காலம் வரை நான் வாழ நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்றால், அண்ணாவின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை போற்ற வேண்டும் என்பதை தயவுசெய்து எண்ணி பார்த்து, அந்த கடமை, கண்ணியம் கட்டுப்பாட்டுடன், நம் கட்சியை வளர்க்க நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்.

யாராலும் அசைக்க முடியாது

யாராலும் அசைக்க முடியாது

இந்த இயக்கத்தை பெரியார், அண்ணா வழியில் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல், நடைபெற்று எந்த கொம்பனாலும், இந்த இயக்கத்தை அசைக்க முடியாது என்ற அளவுக்கு வலிமை பெற்ற இயக்கமாக திமுக திகழ்கிறது. இந்த இயக்கத்தை விட்டுவிட்டு நாம் வேறு இயக்கத்தின் கொள்கையை பின்பற்ற போவதில்லை.

யாராலும் அசைக்க முடியாது

யாராலும் அசைக்க முடியாது

இந்த இயக்கத்தை பெரியார், அண்ணா வழியில் தொடங்கி 50 ஆண்டுகளுக்கு மேல், நடைபெற்று எந்த கொம்பனாலும், இந்த இயக்கத்தை அசைக்க முடியாது என்ற அளவுக்கு வலிமை பெற்ற இயக்கமாக திமுக திகழ்கிறது. இந்த இயக்கத்தை விட்டுவிட்டு நாம் வேறு இயக்கத்தின் கொள்கையை பின்பற்ற போவதில்லை.

ஏழை மக்களின் இயக்கம்

ஏழை மக்களின் இயக்கம்

நாம் பொதுவுடைமை இயக்கத்தின் சமதர்ம தத்துவத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தான் இந்த இயக்கத்தை தொடங்கினோம். ஏழை மக்கள் வாழ்வதற்காக இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. திமுக ஆட்சியில்தான் கை ரிக்‌ஷா ஒழித்து சைக்கிள் ரிக்‌ஷா வழங்கினோம். கைம்பெண்கள் நலத்திட்டம் தொடங்கப்பட்டது.

சட்டம் இயற்றினோம்

சட்டம் இயற்றினோம்

திமுக ஆட்சியில் தான் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம் தொடங்கப்பட்டது. குடிசைகளை கோபுரம் ஆக்கினோம். ஏழைகள் இருக்க கூடாது எல்லோரும் சமத்துவம் பெற்று வாழ வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தோம். ஜாதி, மத பேதம் ஒழிக்க சட்டம் கொண்டு வந்தோம்.

மோடி வாழ்த்தியது ஏன்?

மோடி வாழ்த்தியது ஏன்?

இத்தகைய திட்டங்களை நிறைவேற்றும் ஆட்சியாக திமுக விளங்கியது. அதை வீழ்த்த இன்று ஏதேதோ சூழ்ச்சி நடக்கிறது. அவை எந்த அளவுக்கு போய் இருக்கிறது என்றால் சில நாட்களுக்கு முன் நடந்த சட்டசபை தேர்தலில் ஓட்டு எண்ணும் போது, காலை 10 மணிக்கே பிரதமர் மோடி ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தந்தி அனுப்புகிறார்.

ரகசியம் என்ன?

ரகசியம் என்ன?

எவ்வளவு சூது டெல்லியில் இருந்து மோடியால் நடத்தப்பட்டு இருக்கிறது என்பதை நான் பகிரங்கமாக குற்றம்சாட்டுகிறேன்.

இதற்கு, டெல்லியில் உள்ள மோடி கட்சியினரின் விளக்கம் என்ன? 10 மணிக்கு முன்பே தேர்தல் முடிவு அவர்களுக்கு எப்படி தெரிந்தது? ஓட்டுக்களை முன்பே எண்ணி பார்த்து விட்டார்களா என்ற கேள்விக்கு அவர்கள் பதில் சொன்னால் போதும்.

ரூ.570 கோடிக்கு பதில் என்ன?

ரூ.570 கோடிக்கு பதில் என்ன?

10 மணிக்கு வாழ்த்து தந்தி பறக்கிறது என்றால் அதில் உள் ரகசியம் என்ன? 570 கோடி பணம் கொண்டு செல்லப்படுகிறது. அந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. இதற்கும் மத்தியில் உள்ளவர்கள் பதில் சொல்ல வேண்டும்.

மத்திய அரசு விளக்கம் தருமா?

மத்திய அரசு விளக்கம் தருமா?

இல்லாவிட்டால், மக்கள் அவர்களுக்கு அளிக்க போகும் தீர்ப்பு என்ன. அது புயலாக வீசும், போராட்டமாக மாறி விளக்கத்தை பெறும். மத்திய அரசு இதற்கு பதில் சொல்லித்தான் தீர வேண்டும். இல்லாவிட்டால் அவர்களே குற்றத்தை ஒப்புக்கொண்டவர்கள் ஆகி விடுவார்கள்.

தேர்தல் ரத்து ஏன்?

தேர்தல் ரத்து ஏன்?

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஏதேதோ காரணம் கூறி ஒத்திவைத்தார்கள். இப்போது, ரத்து செய்து விட்டார்கள். இரண்டிற்கும் வேறுபாடு என்ன? ஒத்திவைப்பது என்றால் குறிப்பிட்ட தேதியில் அந்த தேர்தல் நடக்கும். அந்த தேர்தலை ரத்து செய்ய என்ன காரணம்.

உண்மையை விளக்குவோம்

உண்மையை விளக்குவோம்

தேர்தல் நடந்தால், அதிமுக வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்து ரத்து செய்து விட்டதாக கூறப்படுகிறது.

இதை அரசியல் நிபுணர்கள் கணித்து உண்மை நிலையை மக்களுக்கு விளக்க வேண்டும். அவர்களுக்கு உணர்த்தும் காரியத்தை நாம் செய்ய வேண்டும்.

பணப்பட்டுவாடா

பணப்பட்டுவாடா

தேர்தல் நடந்தால், திமுக வெற்றி பெற்று விடும் என்ற பயத்தால் ரத்து செய்து விட்டனர். ரத்து செய்ய இவர்கள் யார். சில தவறுகள் நடந்தது என்கிறார்கள். பணப்பட்டுவாடா நடந்தது என்று கூறுகிறார்கள். ஒத்திவைத்த தேர்தலை ரத்து செய்ய இவர்களுக்கு அதிகாரம் யார் தந்தது.

பாடம் புகட்டுவோம்

பாடம் புகட்டுவோம்

இதை செய்தவர்களுக்கு புத்தி புகட்டும் அளவுக்கு நாம் பாடம் புகட்ட வேண்டும். அந்த பாடம் நாம் பெறும் வெற்றியாகத்தான் இருக்க முடியும். அதற்கான திட்டங்களை நீங்கள் யோசித்து நிறைவேற்ற வேண்டும். தேர்தல் ஆணையத்திற்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும்.

அயோக்கியர்கள் உள்ளனர்

அயோக்கியர்கள் உள்ளனர்

தேர்தல் ஆணையம் எவ்வளவு புனிதமானது, அதை யாரும் அசைக்க முடியாது என்பதற்கு மதிப்பில்லாமல் போகும் அளவுக்கு தேர்தல் ஆணையத்திலும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள். திமுகவுக்கு குந்தகம் செய்யலாம் என்று சிந்தித்து துரோகம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட தேர்தல் ஆணையத்தை நம்பி ஏமாந்துவிடாமல் நமக்கு நாமே என்ற அடிப்படையில் இந்த தேர்தலை திமுகவினர் சந்திக்க வேண்டும்.

ஒழிக்க நினைப்பதா?

ஒழிக்க நினைப்பதா?

இப்போது ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று பார்த்தால் அந்த ஜனநாயகம் பல சீர்கேடுகளையும், உடைசல்களையும், மூடி மறைக்கின்ற செயல்களை உடையதாக இருக்கின்றது. அப்படிப்பட்ட ஜனநாயக கருத்தைக் கொண்ட தேர்தல் ஆணையம் திமுகவை ஒழித்துக்கட்ட செயல்படும் தேர்தல் ஆணையமாக உள்ளது.

 தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

இந்த தேர்தல் ஆணையத்தால் நம்மை ஒழித்துக்கட்ட முடியாது என்ற வகையில் இந்த தேர்தலில் அழுத்தமாக செய்து காட்ட வேண்டும். பெரியார் சொன்னது போல தேர்தல் ஆணையம் அயோக்கியத்தனமானது என்று திட்டவட்டமாக சொல்கிறோம். அயோக்கியத்தனத்தைக் கொண்டு தேர்தல் நடத்துகிறார்கள்.

எண்ணத்தில் மண்ணை போடுவோம்

எண்ணத்தில் மண்ணை போடுவோம்

எப்படியும் அவர்களே வெற்றிபெற வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவர்களின் எண்ணத்தில் மண்ணைப் போட்டு தமிழர்களாகிய நாம், தஞ்சாவூர், அரவக்குறிச்சியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அந்த வெற்றி தான், திமுக இப்போது பெற்றுள்ள வெற்றியை உறுதிப்படுத்துவதாக அமையும்.

யாராலும் அசைக்க முடியாது

யாராலும் அசைக்க முடியாது

திருப்பூரில் பிடிபட்ட ரூ570 கோடி விவகாரத்தில் மத்திய அரசின் பதில் என்ன? திமுகவை வீழ்த்த வேண்டும் என யார் யாரோ சூழ்ச்சி செய்து வருகிறார்கள். 50 ஆண்டுகளாக யாராலும் அசைக்க முடியாத இயக்கமாக திமுக இருந்து வருகிறது என்றும் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

English summary
Attacking the Election Commission (EC) for postponing polling in Aravakurichi and Thanjavur constituencies in Tamil Nadu, DMK chief M. Karunanidhi on Friday said the commission has become a slave to the ruling party, AIADMK, and was acting at the behest of Chief Minister J. Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X