For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் பாதை அமைக்கும் பணிக்காக .... தமிழக கேரள எல்லை பாதை 11 நாட்களுக்கு மூடல்!

Google Oneindia Tamil News

செங்கோட்டை: செங்கோட்டை - புனலூர் அகலரயில் பாதை அமைக்கும் பணி தொடர்பாக தமிழக - கேரள எல்லைப் பாதை இன்று மாலை முதல் வரும் 11 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லை பகுதி செங்கோட்டை - புனலூர் இடையே அகலரயில் பாதை அமைக்கும் பணிக்காக கடந்த 2010ஆம் ஆண்டு மீட்டர் கேஜ் ரயில்பாதையில் 110ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருந்த ரயில் நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

அப்போது ரயில்வே அதிகாரிகள் தரப்பில் 2013ல் பணிகள் முடிக்கப்பட்டு ரயில் பயணம் தொடங்கும் என்று தெரிவித்தனர். ஆனால் 3ஆண்டு முடிந்து 4வது ஆண்டுக் ஆகியும் இந்த தடத்தில் 25சதவிகித பணிகள் கூட முடியவில்லை. இந்த பணியால் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மோசமான ஆரியங்காவு ரயில்வே பாலத்தை சரிபார்க்க முடியாமல் இருந்த நிலையில் கடந்த சிலமாதங்களுக்கு முன் இப்பணியை தொடங்கினர்.

Madurai- Kollam national higway closed near Sengottai

புதிய பாலம்...

தற்போதைய பாலத்தை இடிக்காமல் புதியபாலத்தை கட்டினர்.தற்போது பழைய பாலத்தை இடித்து புதிய பாலம் வழியாக போக்குவரத்தை சரிப்படுத்த பணிகள் நடைப்பெற்றுவரும் நிலையில் முக்கிய பாதையான மதுரை - கொல்லம் நெடுஞ்சாலைத பாதையை அடைத்தால்தான் புதிய பாலத்தின் பணியை தொடர்ந்து முடிக்க முடியும்.

பணிகள் தொடக்கம்...

இந்த பாலத்தை உடைத்து புதிய பாலத்தை காங்கீரிட் போட்டு தளம் அமைக்க சுமார் 10நாட்கள் ஆகும் என்பதால் தென்னக ரயில்வேயின் மேலாளர் ராகேஷ் மிஸ்ரா உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு 25ந் தேதிமுதல் போக்குவரத்து நிறுத்தப்பட்டு பணிகள் தொடங்கி நவம்பர் 5ந் தேதி வரை பணிகள் தொடரும் 6ந் தேதிமுதல் போக்குவரத்து தொடங்கும் என்றார்.

அதிகாரிகள் கூட்டம்...

ஆனால் வங்கக் கடலில் உருவான புயலின் காரணமாகவும்,தீபாவளி பண்டிகை நாள்கள் என்பதாலும், பலத்த மழை பெய்ததால் குறிப்பிட்ட நாளில் அடைக்கவில்லை.இந்நிலையில் கடந்த சிலதினங்களுக்குமுன் கொல்லம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்த சாலை குறித்த அதிகாரிகள் கூட்டம் நடைப்பெற்றது.

எல்லைப் பாதை மூடப்பட்டது...

மாவட்ட ஆட்சியர் பொறுப்பு.உன்னி கிருஷ்ணன் தலைமையில் நடந்த கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள்,காவல்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள்,தென்னக ரயில்வேத் துறை அதிகாரிகள்.உள்ளிட்ட முக்கிய துறை அதிகாரிகள் கலந்துக் கொண்ட இந்தக் கூட்டத்தில் இன்று மாலை 6மணி முதல் நவம்பர் 9 ந்தேதி காலை 6மணிவரை புதிய பாலம் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டுமுடிக்கப்படும். வழக்கம் போல் வரும் நவம்பர் 9 ந் தேதி காலை 6மணி முதல் போக்குவரத்து தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் படி இந்த பாதைஇன்று மாலை 6 மணிமுதல் மூடப்பட்டது.

சபரிமலை சீசன்...

இந்நிலையில் இரு மாநில எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில் சபரிமலை சீசன் வரும் 17ந் தேதி தொடங்கப்படுவதால் அதற்குள் பணியை முடித்து பாதையைத் திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடையடைப்பு...

பாதை மூடப்படுவதால் எராளமான சரக்கு லாரிகள் நேற்று இரவு முதல் வரை அணிவகுத்து சென்றவண்ணம் இருந்தது.மேலும் வரும் வாகனங்களும் அணிவகுத்து வந்தன.மேலும் கேரளாவுக்கு செல்ல அச்சன்கோவில் வழியாக புனலூர் செல்ல ஒருபாதை உள்ளது. 25கிலோமீட்டர் அதிகம் என்றாலும் இந்தபாதையில் வாகனங்கள் செல்லவழி இருக்கிறது.ஆனால் அப்பகுதிமக்கள் இந்த வழியில் வாகனங்கள் சென்றால் தங்கள் பகுதி சாலைகள் சேதமடைந்து விடும் என்று கூறி எதிர்ப்புத்தெரிவித்து இன்றும் ,நாளையும் கடையடைப்பு மற்றும் பந்த் நடத்த தொடங்கியுள்ளனர்.

பள்ளிகள் விடுமுறை...

இந்தபோராட்டம் காரணமாக பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவ,மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

English summary
Because of bridge work in Ariyankavu near Sengottai, the Madurai - Kollam national highway is closed for 11 days from today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X