காங்கிரஸ் கொடுத்த தொல்லை.. ஆப்பு வைக்க ரெடியாகும் ஸ்டாலின்.. 2029 நாடாளுமன்ற தேர்தலில் ஆட்டமே வேற
சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக திமுக தலைமைக்கு காங்கிரஸ் பெருமளவு தொல்லை கொடுத்தது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் காங்கிரஸ் எங்கு எல்லாம் மாநில கட்சியுடன் கூட்டணி வைக்கிறதோ, அங்கே எல்லாம் பல சிக்கல்களை உருவாக்குகிறது.
குறிப்பாக பீகாரில் தேஜஸ்வி யாதவிடம் தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும் என்று போர் கொடி உயர்த்தி கூட்டணி வைக்கிறது. ஆனால் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை தழுவுகிறது. காங்கிரஸ் பல இடங்களை இழப்பதால் கூட்டணி கட்சியின் தலைமையும் பாதிக்கப்படுகிறது.

இதையே ஒரு அரசியலாக காங்கிரஸ் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. பீகாரில் எப்படி கூட்டணி கட்சிக்கு தொல்லை கொடுத்ததோ, அதையே தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் செய்தது தங்களுக்கு கூடுதல் தொகுதி வேண்டும். ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று கூறும் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதிலோ, தொண்டர்களை சேர்ப்பதிலோ சுனக்கம் காட்டி வருகிறது.
இந்த தேர்தலில் திமுக தோல்வியை தழுவியதற்கு காங்கிரஸ் கொடுத்த டார்ச்சர் ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் குரல் கொடுக்கும் பட்சத்தில் 2029 நாடாளுமன்ற தேர்தலில் ஒரு பெரிய ஆப்பு வைக்க திமுக தயாராகி வருகிறது. ஏற்கனவே அதற்கான டீசரை திமுக வெளியிட்டு விட்டது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி அமைவதில் திமுக முக்கிய காரணமாக இருந்தது.
பல்வேறு மாநிலக் கட்சிகளை காங்கிரஸ் தலைமையில் இணைத்து தேர்தலை சந்தித்தது. இந்த சூழலில் காங்கிரஸ் தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியதால், பல்வேறு மாநிலக் கட்சிகள் அதிருப்தியில் உள்ளன. இந்த தருணத்தில் 2029 நாடாளுமன்றத் தேர்தலை மாநில கட்சிகள் இணைந்து மூன்றாவது ஒரு அணியை உருவாக்க திட்டம் தீட்டி இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் தவெக வுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணி வைத்தால் அதற்கு பதிலடி தரும் விதமாக மம்தா, அரவிந்த் கெஜ்ரவால், தேஜஸ்வி யாதவ், சிவசேனா உதவ் தாக்கரே ஆகியோர்களை இணைத்து நாடு தழுவிய அளவில் மூன்றாவது அணியை உருவாக்க ஸ்டாலின் திட்டம் போட்டு இருக்கிறார்.
அதற்கு ட்ரெய்லர் காட்டும் விதமாகத்தான் அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் ஒருவேளை காங்கிரஸ் கட்சி தவெக வுடன் இணைந்தால் 2029 தேர்தலை மறந்து விட வேண்டும் தான் என்ற ஒரு இக்கட்டான நிலையை ஏற்படுத்த திமுக திட்டமிட்டு இருக்கிறது. இது எப்படி பார்த்தாலும் பாஜகவுக்கு மிகப் பெரிய பிளஸ் ஆக பார்க்கப்படுகிறது.
-
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
விஜய்: எந்த பயனும் இல்லை.. பிடிங்க.. நீங்க கொடுத்த ரூ.5000 + 1 ரூபாய்.. ஈரோடு விவசாயிகள் அதிரடி! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை












Click it and Unblock the Notifications