சமந்தா- நாக சைதன்யா விவாகரத்துக்கு கேடிஆர் காரணம்? அப்பா நாகார்ஜுனாவுக்கு வந்ததே கோபம்! பறந்த புகார்
ஹைதராபாத்: நடிகை சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து குறித்து அமைச்சர் சுரேகா கூறிய கருத்துகள் சர்ச்சையாக மாறியுள்ளது. அவரது பேச்சுக்கு சமந்தா கண்டனம் தெரிவித்திருந்தார். அதேபோல அமைச்சர் சுரேகாவும் தனது பேச்சுக்கு ஏற்கனவே வருத்தம் தெரிவித்துவிட்டார். இருப்பினும், இந்த பிரச்சினை ஓய்வதாகத் தெரியவில்லை. சுரேகா வேண்டுமென்றே பொய்யான கருத்துகளைப் பரப்புவதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரபல நடிகர் நாகார்ஜுனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தெலுங்கானாவில் இப்போது ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி உள்ளது. அங்கு வனத்துறை மற்றும் சுற்றுச்சுழல் துறை அமைச்சராக சுரேகா இருக்கிறார்.

சமந்தா- நாக சைதன்யா விவாகத்து குறித்து இந்த சுரேகா சொன்ன கருத்துகளே கடந்த இரண்டு நாட்களாகத் தெலுங்கானாவில் மிகப் பெரிய பேசுபொருளாக வெடித்துள்ளது.
சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து: அதாவது நடிகை சமந்தா பிரபல தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார். இருப்பினும், இவர்களின் திருமண வாழ்க்கை வெறும் 4 ஆண்டுகள் மட்டுமே நீட்டித்தது. கடந்த 2021இல் இந்த தம்பதி விவாகரத்து பெற்றனர். கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தாக அப்போது இருவரும் அறிக்கை வெளியிட்டனர்.
இருவருக்கும் இடையே விவாகரத்து நடந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இது தொடர்பாக அமைச்சர் சுரேகா இப்போது சில கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது சமந்தாவின் விவாகரத்துக்கு பிஆர்எஸ் செயல் தலைவரும் முன்னாள் முதல்வரான கேசிஆரின் மகனுமான கே.டி.ராமராவ் தான் காரணம் என்று அவர் கூறியிருந்தார். இத்தோடு வேறு சில சர்ச்சை கருத்துகளையும் அவர் கூறியிருந்தார்.
வருத்தம் தெரிவித்த அமைச்சர் சுரேகா: இதுவே இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. அமைச்சரின் இந்த கருத்துக்கு நடிகை சமந்தா கடும் எதிர்ப்பு தெரிவித்து விமர்சனம் செய்திருந்தார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அமைச்சரே சுரேகாவே தனது கருத்துத்து வருத்தம் தெரிவித்தார். அதேநேரம் கேடிஆர் குறித்த குற்றச்சாட்டுகள் உண்மை என்றும் அதை வாபஸ் பெற முடியாது என்றும் கூறியிருந்தார்.
இது தெலுங்கானாவில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தனது மகனின் விவாகரத்து குறித்து தெலுங்கானா சுற்றுச்சூழல் அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பிரபல நடிகர் நாக சைதன்யாவின் தந்தையும் தெலுங்கு சினிமா சூப்பர்ஸ்டாருமான நாகார்ஜுனா வழக்கு தொடர்ந்துள்ளார். ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீசிமன்றத்தில் இது தொடர்பாக நாகார்ஜுனா சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நாகார்ஜுனா புகார்: நடிகர் நாகார்ஜுனா சார்பில் தொடரப்பட்ட அந்த வழக்கில், "தான் சொல்லும் தகவல் பொய்யானது என்பதை உணர்ந்தே அவர் (அமைச்சர் சுரேகா) இந்த கருத்தைக் கூறியிருக்கிறார். எங்கள் தொழில் வாழ்க்கையைப் பாதிக்கவும் மற்றும் குடும்ப நற்பெயரைச் சேதப்படுத்தும் ஒரே நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே கூறியிருக்கிறார்.
அரசியல் ஆதாயம் மற்றும் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தலும் குடும்ப நற்பெயருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில், பொய்யான தகவல்களைப் பரப்பும் நோக்கத்துடன் இந்த தகவல்களை கூறியிருக்கிறார். இது முழுக்க முழுக்க ஒரு கிரிமினல் குற்றம். அவரது பேச்சுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications