திருமணத் தடைகளை நீக்கும்..மீன்குளத்தி பகவதி அம்மன்! அமைச்சர் செங்கோட்டையன், எம்எல்ஏ சத்யபாமா தரிசனம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புகழ்பெற்ற கேரள மாநிலம் பள்ள சேனா கிராமத்தில் அமைந்துள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் சுவாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சத்தியபாமாவும் தரிசனம் செய்திருக்கிறார். செல்வ செழிப்பு, கடன் நிவர்த்தி மற்றும் திருமண தடைகளை நீக்கும் சக்தி வாய்ந்த தெய்வமாக மீன்குளத்தி பகவதி அம்மன் கோவில் கருதப்படுகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள பல்லசேனா கிராமத்தில் அமைந்துள்ள மீன்குளத்தி பகவதி அம்மன் கோயில், மதுரை மீனாட்சி அம்மனே அருள்பாலிப்பதாகக் கருதப்படும் ஒரு புகழ்பெற்ற பிரார்த்தனைத் தலமாகும்.

கோயம்புத்தூரில் இருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் உள்ள இக்கோயில் செல்வச் செழிப்பு, கடன் நிவர்த்தி மற்றும் திருமணத்தடைகளை நீக்கும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் வருவாய்- பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.

Sengottaiyan Kerala Temple

மீன்குளத்தி கோவில்

அவருடன் திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ சத்தியபாமாவும் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார். கோவையில் இருந்து கார் மூலம் அந்த கோவிலுக்கு சென்ற செங்கோட்டையனை கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்ப மரியாதை உடன் வரவேற்றனர். தொடர்ந்து பணப்பறை நிறைத்து மனமுருக சுவாமி தரிசனம் செய்தார் செங்கோட்டையன். சுவாமியின் முன்பு இருக்கும் பணப்பறை எனப்படும் குடத்தில் சில்லறை நாணயங்களை நிறைத்து வைத்து வேண்டிக் கொண்டால் வேண்டியது நடக்கும் என்பது அந்த கோயிலின் ஐதீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன்

தற்போது இந்த வீடியோக்களை கோவில் நிர்வாகம் வெளியிட்டு இருக்கிறது. தொடர்ந்து சமூக வலைதளங்களில் அதனை ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர். அதிமுகவில் இருந்து வெளியேறிய செங்கோட்டையன் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார். சேர்ந்த உடனே அவருக்கு கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

சத்தியபாமா

அவருடன் முன்னாள் எம்பி சத்தியபாமாவும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் செங்கோட்டையன் தனது தொகுதியிலேயே போட்டியிட்ட நிலையில் சத்தியபாமா திருப்பூர் வடக்கு தொகுதியில் போட்டியிட்டார். இருவரும் வென்ற நிலையில் செங்கோட்டையனுக்கு முதலில் நிதித்துறை பொறுப்பு வழங்கப்பட்டது.

சுவாமி தரிசனம்

பின்பு அமைச்சரவை மாற்றம் நடந்த போது அவர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். சீனியாரிட்டியிலும் அவர் ஓரம் கட்டப்பட்ட நிலையில் திடீரென அவர் மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+