சசி தரூர் ட்வீட்டை முன்வைத்து விவாதம்: ஆப்கான் தாலிபான்கள் பேசுவது திராவிட மொழி பிராகுயி? மலையாளம்?
திருவனந்தபுரம்: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றிய தாலிபான்களில் இருவர் மலையாளத்தில் உரையாடுவதாக மூத்த காங்கிரஸ் தலைவர் சசிதரூர் பதிவிட்ட ட்வீட் மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இப்போது தாலிபான்கள் பேசுவது எந்த மொழி என்பது குறித்து விவாதம் நடைபெறுகிறது. தாலிபான்கள் ஆதி வட திராவிட மொழிகளில் ஒன்றாக பிராகுயி பேசுவதாகவும் கூறப்படுகிறது.
ஆப்கானிஸ்தான் நாடு முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். தலைநகர் காபூல், தாலிபான்கள் வசம் வீழ்ந்த போது வெளியான ஒரு வீடியோ இப்போது இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டரில் கடந்த 15-ந் தேதியன்று @RamizReports என்ற பதிவர் ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தாலிபான்களில் ஒருவர் கீழே மண்டியிட்டு மண்ணை முத்தமிட்டு ஆனந்த கண்ணீர் வடிக்கிறார். அவரை மற்றொரு தாலிபான் சமாதானப்படுத்துகிறார். இவ்வளவுதான் அந்த வீடியோ காட்சி. இப்போது தாலிபான்கள் இருவர் உரையாடிக் கொள்வதுதான் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
@RamizReports-ன் இந்த வீடியோ ட்வீட்டை மூத்த காங்கிரஸ் கட்சித் தலைவரான கேரளாவை சேர்ந்த சசிதரூர் தமது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். அந்த வீடியோவில் இருப்பவர்கள் மலையாள தாலிபான்களா? 8-வது செகண்ட்டில் samsarikkette என்கிற மலையாள உரையாடல் இடம்பெற்றுள்ளது என குபீர் சந்தேகத்தை கிளப்பிவிட்டார். இப்போது கேரளாவில் சசி தரூரின் இந்த ட்வீட்தான் கடுமையான விவாதப் பொருள்.

அதேநேரத்தில் வீடியோவை பதிவிட்டிருந்த பதிவர் @RamizReports ஒரு விளக்கம் தந்துள்ளார். அது இன்னமும் கூடுதல் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில், தாலிபான்கள் இயக்கத்தில் கேரளாவை சேர்ந்தவர்கள் யாரும் இல்லை. தாலிபான்கள் பெரும்பாலும் பலூச், ஜாபூல் மாகாணங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பிராவி என்கிற திராவிட மொழியை பேசுகிறவர்கள். பிராவி மொழியானது தெலுங்கு, தமிழ், மலையாளத்தைப் போன்ற உச்சரிப்புகளைக் கொண்டது என கூறியுள்ளார்.
இதற்கு பதில் தந்துள்ள சசிதரூர், இது மிக சுவாரசியமாக இருக்கிறது. அவர்கள் பேசும் மொழி என்ன என்பதை மொழியிலாளர்கள் கண்டுபிடிக்கட்டும். அதேநேரத்தில் தாலிபான்களுடன் தவறாக வழிகாட்டுதலில் சிக்கிய மலையாளிகள் இருந்தார்கள் என்பதற்கான சாத்தியத்தை நிராகரிக்க முடியாது என கூறியிருந்தார். சசி தரூரின் இந்த பதிவுகள் கேரளாவில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கின்றன. கேரளாவை சேர்ந்தவர்கள் தாலிபான்கள் இயக்கத்தில் தீவிரவாதிகளாக இருக்கின்றனர் அல்லது இருந்தனர் என்பதை சசிதரூர் ஒப்புக் கொண்டிருக்கிறார் என்கிற விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பிராகுயி மொழி
இது ஒருபுறம் இருக்க @RamizReports என்ற பதிவர் குறிப்பிட்டது குறித்து இப்போது பார்ப்போம். அவர் கூறியதில் ஒரு உண்மை உண்டு. பாகிஸ்தானின் பலுசிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் பகுதிகளில் பிராகுயி என்கிற திராவிட மொழி பேசப்படுவது மொழியியல் அறிஞர்கள் உறுதி செய்த வரலாற்றுப் பதிவுதான். அதாவது சிந்துசமவெளி நாகரிகம் விரிந்து பரந்த நெடும் பிரதேசங்களில் பேசப்பட்ட திராவிட மொழியின் இன்றைய திரிபு வடிவம்தான் பிராகுயி மொழி. இதுதான் பராஹவி மொழி அல்லது பிராவி மொழி என அழைக்கப்படுகிறது. இந்த மொழி பேசுகிற மக்கள் பராஹவி எனவும் அழைக்கப்படுகின்றனர். பிராகுயி மொழியை வட திராவிட மொழிகளின் பட்டியலில் வரலாறு மற்றும் மொழியியல் அறிஞர்கள் சேர்த்துள்ளனர். ஆப்கானியர்கள் பேசும் மொழி பொதுவாக பலூச்சி என்றே வரையறுக்கப்பட்டுள்ளது.
வட திராவிட மொழி
தமிழக அரசின் தமிழ் இணைய பல்கலைக் கழகம் (http://www.tamilvu.org/courses/degree/a051/a0511/html/a05114l5.htm) பிராகுயி மொழி பற்றி விரிவாகவே பதிவு செய்திருக்கிறது. தமிழ் இணைய பல்கலைக் கழகம் என்ன சொல்கிறது? வட திராவிட மொழிகளில் பிராகுயி, மால்டோ, குரூக் ஆகிய மூன்று மொழிகள் அடங்கும். ஆந்திராவில் வழங்கும் கோயா மொழியைத் தனி மொழி என்று கண்டுபிடித்து அதையும் வட திராவிட மொழியுடன் சேர்த்துள்ளனர். எனினும் சிலர் கோயா மொழியைக் கோண்டி மொழியின் வட்டார வழக்காகவே கருதுகின்றனர். வட திராவிட மொழிகளில் பிராகுயி முதலில் பிரிந்திருக்க வேண்டும். காலப் போக்கில் குரூக், மால்டோ இரண்டும் தனி மொழிகளாகப் பிரிந்திருக்க வேண்டும் என்பர். வட திராவிட மொழிகளில் 'க்' இறந்தகால இடைநிலையாகவும் 'ஓ' எதிர்கால இடைநிலையாகவும் உள்ளன. மொழி முதலில் வரும் ககரம் ஹகரமாகவும், வகரம் பகரமாகவும், சகரம் ககரமாகவும் மாறும் நிலையை வடதிராவிட மொழிகளில் காணமுடிகிறது.
பலுச்சிஸ்தான் பகுதிகளில் பிராகுயி மொழி பேசப்படுகிறது என்று டாக்டர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளார். டென்னிஸ் டி.எஸ். பிரே (Denys de Savmarez Bray) என்பவர் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது பிராகுயி மொழி என்று நிறுவினார். பேராசிரியர் எமனோ 1962இல் பிராகுயி மொழி வட திராவிட உட்பிரிவைச் சேர்ந்தது என்று விளக்கினார். திராவிட மக்களும், பிராகுயி மக்களும் ஒரே இனத்தவர் என்று கொள்ளச் சான்றுகள் இல்லை. எனினும் திராவிட மொழி பேசுவோரது கலப்பு இருக்க வேண்டும் என்று இராமச்சந்திர தீட்சிதர் குறிப்பிடுவார். பிராகுயி மொழி பாரசீக மொழியுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள கலத், ஹயர்பூர் மாவட்டங்களில் உள்ளவர்கள் பிராகுயி மொழி பேசுகின்றனர். ஈரான், ஆப்கானிஸ்தான் பகுதிகளில் வாழ்வோர் பிராகுயி மொழி பேசுகின்றனர். இப்பகுதிகளில் பலுச்சி மொழி பெருவழக்காக உள்ளது. பிராகுயி மொழி பேசுவோர் எண்ணிக்கை மூன்று இலட்சம் என்றும், ஐந்து இலட்சம் என்றும் இரு வேறு கூற்றுகள் உள்ளன. பேராசிரியர் எமனோ பிராகுயி மொழி பற்றி ஆய்ந்து பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். இவ்வாறு தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் இணையப் பக்கம் விவரிக்கிறது.
சிந்துசமவெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் அவர்களும் பல தரவுகளில் பிராகுயி மொழி குறித்து விவரித்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications