உளுந்து சாகுபடியில் தஞ்சாவூர் விவசாயி சாதனை
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலம் கிராமத்தில் உளுந்து சாகுபடியில் ஒரு விவசாயிசாதனை படைத்துள்ளார்.
கதிராமங்கலத்தைச் சேர்ந்தவர் கோபால். இவர் ஒரு விவசாயி. கோபால் தனது 1 ஏக்கர்நிலத்தில் ஆடுதுறை-5 என்ற வகை உளுந்து பயிரிட்டிருந்தார். இப்போது இந்தநிலத்தில் 1108 கிலோ உளுந்து விளைந்துள்ளது. இது ஒரு சாதனை அளவாகும்.
65 நாட்களில் இந்த உளுந்து விளைந்துள்ளது. நவீன தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி அனைத்து வேலைகளையும் கோபால் செய்துள்ளார். இந்த உளுந்துமூலம் அவருக்கு ரூ. 22, 700 லாபம் கிடைத்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலேயே இவ்வளவு கிலோ உளுந்து விளைந்துள்ளது இதுவேமுதல் முறை என்று மாவட்ட கலெக்டர் ராஜாராம் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications