கோவை விவசாயப் பல்கலைக்கழகத்துக்கு நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

கோவை:

பருத்தி ஆராய்ச்சிக்காக கோவை விவசாயப் பல்கலைக் கழகத்திற்கு இரண்டரை கோடி ரூபாய் நிதியுதவிஅளிக்கப்பட்டது.

கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்லைக் கழகத்தில் பருத்தி தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 90 லட்சம் ஹெக்டேர் பரப்பில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

ஆனால், பரப்பளவை விட மிக குறைந்த அளவே மகசூல் கிடைப்பதால், பருத்தி உற்பத்தியின் சராசரி அளவைஅதிகரிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை ஏற்பட்டள்ளது. அதேசமயம், தரமான பருத்தி உற்பத்தி இல்லாததால்ஏற்றுமதி சர்வதேச அளவில் 3.1 சதவீதம் மட்டுமே உள்ளது.

எனவே, பருத்தி உற்பத்தியை அதிகரிக்கவும், தரத்தை உயர்த்தவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காகவேளாண்மைப் பல்கலைக் கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களுக்காக மத்திய அரசு 550 கோடி ரூபாய்செலவில் பருத்தி தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை துவக்கியது.

இந்த திட்டத்தின் மூலம், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கு புதிய ஆராய்ச்சித்திட்டங்கள் செயல் படுத்தப்படவுள்ளன. இதற்கான தொழில்நுட்ப மேம்பாட்டு மையம், இரண்டரை கோடி ரூபாய்நிதியுதவி செய்துள்ளது.

இந்த நிதியின் லம் மண் பரிசோதனையிலிருந்து பருத்தி விளையும் வரையில் உற்பத்தி பெருக்கத்திற்கானஏற்பாடுகள் செய்யப்படும். வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சிக்காக மதுரை, ஆடுதுறை,ஸ்ரீவில்லிப்புத்தூர், மதுரை, கிள்ளிகுளம் ஆகிய இடங்களிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

இதனை வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கண்ணையன் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+