ரசாயன உரங்களால் விஷமாகி வரும் இந்திய உணவு
கோவை:
உணவுப் பொருட்களில் ரசாயனப் பொருட்களால் ஏற்படும் பதிப்பைத் தவிர்க்க உலக ந ாடுகள் இயற்கையான விவசாயமுறைகளுக்குத் திரும்புகின்றன என மாநில விவசாயத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கூறினார்.
கோவையில் இயற்கை வேளாண்மை ஒருங்கிணைந்த சேவை அமைப்பின் துவக்க விழா நடந்தது. இந்த விழாவிற்கு தமிழகவிளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தலைமை வகித்தார். அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம், சங்கத்தைத் துவக்கி வைத்துப் பேசியதாவது:
விவசாயத்தில் உரம் மற்றும் பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்திலும் ரசாயணம் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் மண்ணின்தன்மை கெடுவதோடு, உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் நச்சுத் தன்மை ஏற்படுகிறது. எனவே பல நாடுகள் தற்போதுரசாயனமற்ற இயற்கையில் விளையும் உணவுப் பொருட்களை நாடிச் செல்லத் தொடங்கியுள்ளன.
நமது நாட்டில் காலங்காலமாக நீட்டித்து வந்த இயற்கை விவசாயத் தொழில்நுட்பம் இப்போது மறைந்து போய் விட்டது.இயற்கையோடு இணைந்த அந்த தொழில்நுட்பத்தை மீண்டும் நாம் பயன்படுத்த வேண்டும்.
இயற்கையாக விளையும் பொருட்களுக்கு சான்றிதழ் வழங்க சர்வதேச நாடுகள் முன் வருகின்றன. உலக நாடுகளிலேயேஇந்தியாவில் தான் அதிக நச்சுத் தன்மை கலந்து உணவினை மக்கள் சாப்பிடுகின்றனர்.
இந்தியர்கள் சாப்பிடும் உணவில் ஒரு நாளைக்கு 362. 5 மில்லி கிராம் அளவு நச்சு (ரசாயன விஷம்) அல்லது ரசாயனத் தன்மைஇருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக ஜெர்மனில் 349 மில்லிகிராம், ஜப்பானில் 156 மில்லி கிராம் நச்சு உணவுடன் கலந்துள்ளது. இந்த விகிதம்அமெரிக்காவில் தான் குறைவாக உள்ளது. அங்கு 7.6 மில்லி கிராம் அளவு மட்டுமே உள்ளது.
கிராமப் பகுதியில் உள்ள மாணவர்கள் பள்ளிப் படிப்போடு தங்களது படிப்பை முடித்துக் கொள்கின்றனர். இவர்களின்நலனுக்காகவும், கிராமப்புறங்களில் உள்ள விவசாய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் பயன்பெறும் வகையிலும் விவசாயம்ஒரு பாடமாக அறிகப்படுத்தப்படும்.
இது நடப்புக் கல்வி ஆண்டு முதல் அமலுக்கு வரும். நடப்பாண்டு முதல் மேல்நலைப் பள்ளிகளில் இப்பாடம் நடைமுறைக்குவருகிறது எனறார் ஆறுமுகம்.












Click it and Unblock the Notifications