ஊட்டியில் போராட்டம் நடத்துகிறார் கவுடா
ஊட்டி:
விவசாயிகளின் நலன் காக்க மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என ஊட்டியில் முன்னாள் பிரதமர் தேவகவுடாதெரிவித்தார்.
ஊட்டியில் திங்கள்கிழமை முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ஊட்டி வந்துள்ள தேவகவுடாஊட்டியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு விவசாயிகளின் நலனைக் காக்கத் தவறி விட்டது. விவசாய விளை பொருட்களின் விலை கணிசமான அளவுவீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். நாடு முழுவதும் விவசாயிகளின் நலன் காக்க போராட்டம் நடத்துவதைத்தவிர வேறு வழியில்லை. மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள் அல்ல. ஆனால் அரசின் கவனத்தைக் கவர இதைத் தவிரவேறு வழியில்லை.
தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மேற்கொண்டுள்ள தவறான பொருளாதாரக் கொள்கையால் தேயிலை மட்டுமல்ல, அனைத்து விவசாயவிளைபொருட்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலுக்கு வரும் சர்வதேச அளவில் ஏற்படும் வர்த்தக மாற்றத்தால் விவசாயிகள் பெரும் கஷ்டத்திற்குள்ளாவார்கள்.அப்போது நிலைமை இன்னும் மோசமடையும். தேயிலை, ரப்பர், கரும்பு, தேங்காய் ஆகிய வற்றின் விலையில் வீழ்ச்சி ஏற்படும்.
இதே போன்று 740 பொருட்களுக்கு விதிமுறைகளில், சர்வதேசச் சந்தையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் அளவு நீங்கும்போது விலையில்கடுமையான வீழ்ச்சியிருக்கும். இலங்கைத் தேயிலையின் வரத்து அதிகரிக்கும்.
தேயிலைப் பிரச்னைக்காக நான் ஊட்டி வந்துள்ளது, அனைத்துக் கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்கத் தான். இவர்களின் குரல் இந்தியா முழுவதிலும் தெரியவேண்டும் என்பதற்காக இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகிக்கிறேன்.
கடந்த 96-97ம் ஆண்டில், தேயிலை விலை கிலோ ஒன்றிற்கு 18 ரூபாயாக இருந்தது. தற்போது கிலோ ஒன்றிற்கு ரூ. 12 ஆக இருந்தால் கூடகட்டுபடியாகும். இதனை விட விலை குறைவாக இருப்பதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இப்போது விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த மானியங்கள் கடுமையாக குறைக்கப்பட்டு விட்டன. இதனால் இந்தியாவில் விவசாயம்நலிவடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சரி கட்ட அரசு முன்வரவில்லையென்றால் விளைவுகள் மோசமாக இருக்கும் என்றார் தேவகவுடா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications