For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரேலின் விவசாய தொழில் நுட்பம் இந்தியாவுக்கு கைகொடுக்குமா?

இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி சென்றுள்ள அரசியல் பயணம் இந்தியாவுக்கு விவசாயம் உள்ளிட்ட முக்கிய தொழில்களின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் அமையும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் வியக்கும் விவசாய புரட்சி செய்த இஸ்ரேல் நாட்டின் வேளாண் தொழில் நுட்பங்களை இந்தியா கொண்டுவர மோடி திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

வெப்பம் நிறைந்த பாலைவனத்தையும், குடிக்க உதவாத உப்பு நீர் ஏரியையும், சீரற்ற பருவநிலையையும் கொண்டது இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டே இஸ்ரேல் இன்று வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது.

இதனால் பாரம்பரிய விவசாய முறைகளைப் பின்பற்றி வரும் இந்தியா இஸ்ரேலிய வேளாண் தொழில்நுட்பங்களை பெற முடிவு செய்துள்ளது. இது நிச்சயம் இந்திய விவசாயத்தில் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலில் வளமான மண் இல்லை, தண்ணீர் இல்லை, வேளாண்மை செய்ய ஆட்கள் இல்லை, சீரான பருவநிலை இல்லை. ஆனால், இந்தியாவைப் போல, 10 மடங்கு அதிகமாக விவசாய பொருட்களை விளைவிக்கிறது.

அமெரிக்காவுக்கு காய்கறி கொடுக்கும் நாடு

அமெரிக்காவுக்கு காய்கறி கொடுக்கும் நாடு

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு தேவையான காய்கறி, பழங்களை ஆண்டு முழுவதும் விளைவித்து தருகிறது இஸ்ரேல். இந்தியாவை விட, 10 மடங்கு அதிகமாக வேளாண் உற்பத்தியை இஸ்ரேலில் செய்து அதிரடி காட்டுகின்றனர் அந்நாட்டு விவசாயிகள்.

1 ஏக்கரில் 50 டன் தக்காளி

1 ஏக்கரில் 50 டன் தக்காளி

வேளாண்மையில் வியத்தகு மாற்றங்கள் சாத்தியமா என நாம் நினைக்கலாம். ஆனால் 1 ஏக்கரில் நாம், 5 டன் தக்காளி விளைவிக்க முடிகிறது என்றால் அவர்களால், 50 டன் தக்காளி விளைவிக்க முடிகிறது என்கிறார்கள் விவசாய வல்லுநர்கள்.

சொந்தமாக யாருக்கும் நிலம் இல்லை

சொந்தமாக யாருக்கும் நிலம் இல்லை

இஸ்ரேலில் விவசாயம் செய்யும் யாருக்கும், சொந்தமாக நிலம் கிடையாது. அரசின் நிலத்தை தான் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்கின்றனர். விவசாயத்திற்கு முதல் மூலப்பொருள் நீர். இஸ்ரேலில் மூன்று மாதங்கள் மட்டுமே மழை பெய்யும். தண்ணீர் ஆதாரத்திற்கு இஸ்ரேல் மக்கள் நம்புவது கலிலியோ ஏரியை மட்டுமே.

சக்கைப்போடு போடும் சொட்டுநீர் பாசனம்

சக்கைப்போடு போடும் சொட்டுநீர் பாசனம்

இஸ்ரேலிய விவசாயத் தொழில்நுட்பங்களில் முக்கியமானது சொட்டு நீர் பாசனமும், பாதுகாப்பான பண்ணை விவசாயமும்தான். ஒவ்வொரு நிலத்திலும் இரண்டு தண்ணீர் இணைப்புகள் இருக்கின்றன. எதற்குமே பயன்படாத பாலைவன மண்ணில்தான் விவசாயம் செய்யப்படுகிறது.

இயற்கை உரங்கள்

இயற்கை உரங்கள்

மிக மிக எளிமையான தேங்காய் நார் போன்ற அங்குள்ள கழிவுகளே உரமாக பயன்படுத்தப்படுகின்றன. கணினியின் மூலம் அறுவடை கண்காணிக்கப்படுகிறது.

வெற்றியை அதிகரிக்கும் கூட்டுப்பண்னை திட்டம்

வெற்றியை அதிகரிக்கும் கூட்டுப்பண்னை திட்டம்

ஒரே மாதிரி திட்டமிடல், இயற்கையான உரங்கள், கூட்டுப் பண்ணை திட்டம் போன்றவற்றால் இந்தியாவை விட பல மடங்கு விளைச்சலை தர முடிகிறது. அதனால் நேர்த்தியான விலையில் விளைபொருட்களை அங்குள்ள விவசாயிகளால் விற்க முடிகிறது.

இஸ்ரேலை பின்பற்றினால் இந்தியா வளரும்

இஸ்ரேலை பின்பற்றினால் இந்தியா வளரும்

பசுமைக் குடில், மண் போர்வை, நிழல் வலை, சொட்டு நீர் பாசனம் போன்ற இஸ்ரேலிய தொழில்நுட்பங்களை இந்தியாவிலும் பின்பற்றினால் விவசாயத்தில் புதிய சாதனையை படைக்க முடியும் என்பது வேளாண் நிபுணர்களின் முடிவாக இருக்கிறது.

English summary
Israeli Agricultural Technology will it suit for Indian Agriculture? India expected.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X