தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

தேயிலை விவசாயிகள் பிரச்சினை ஆய்வுக் குழு அறிக்கை சமர்ப்பிப்பு

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகள் பிரச்சனை குறித்து ஆராய அமைக்கப்பட்டகுழுவின் அறிக்கை, முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:

நீலகிரி மாவட்டத்தில் தேயிலைத் தொழிலில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை ஆய்வுசெய்ய 26.5.2000 அன்று தொழில் வணிகத் துறை ஆணையர், மத்திய தேயிலைவாரியத்தின் தன்மை மண்டல செயல் அலுவலர், நீலகிரி மாவட்ட கலெக்டர் மற்றும்இண்ட்கோசர்வ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழுஒன்றை தமிழக அரசு அமைத்திருந்தது.

இக்குழுவினர் நீலகிரியில் பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டு, தேயிலைத்தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், உற்பத்தியாளர்கள், இடைத்தரகர்கள்,வியாபாரிகள், தேயிலை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைச் சந்தித்து,கலந்துரையாடி, அவர்களிடமிருந்து கருத்துக்களைப் பெற்றனர்.

அத்துடன் தேயிலை தொடர்பான வெளியீடுகள் மற்றும் புள்ளி விவரங்கள்ஆகியவற்றை ஆய்வு செய்தனர். மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுடன்ஆலோசனை நடத்தினர்.

ஆய்வு மற்றும் கலந்துரையாடல் அடிப்படையில் தயாரித்துள்ள இறுதி அறிக்கையைவெள்ளிக் கிழமை முதல்வர் கருணாநிதியிடம் குழுவினர் சமர்ப்பித்தனர். இக்குழுவழங்கிய பரிந்துரைகளை மத்திய அரசுடன் கலந்து ஆலோசனை செய்து உரியமுடிவுகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் அறிவிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+