நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம் எப்போது? தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்
தூத்துக்குடி: வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. இந்த மாவட்ட மக்களுக்கு நிவாரண நிதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தென் தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களில் இந்த மழை வேகமெடுத்தது. இதனால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் சட்டென நிரம்பின. மட்டுமல்லாது அதிலிருந்து வெளியேறிய உபரிநீர் ஊருக்குள் பாய்ந்திருக்கிறது. எனவே இந்த மாவட்டங்களின் பெரும்பாலான கிராமங்கள் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டன.

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தாமிரபரணி ஆற்றிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி நகரங்களில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இன்று தூத்துக்குடியில் மழை இல்லை என்றாலும் சில இடங்களில் தேங்கி நின்ற வெள்ளம் இன்னும் வடியவில்லை. வெள்ளத்தில் சில வீடுகள் இடிந்து விழுந்திருக்கின்றன. பைக்குகள், கார்கள், பேருந்துகள் என அனைத்து வகை வாகனங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளம், பல்வேறு இணைப்பு சாலைகளை துண்டித்திருப்பதால் மீட்புகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. வெள்ள நீரின் வேகம், நேற்றைவிட இன்று ஓரளவு குறைந்திருப்பதால் மீட்பு படையினர் படகு மூலம் மக்களை மீட்க போராடி வருகின்றனர். தற்போது வரை மீட்கப்பட்டிருப்பவர்கள் திருமண மண்டபங்களிலும், அரசு கட்டிடங்களிலும் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இன்று மாலை நிலவரப்படி திருநெல்வேலி டவுன் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளம் முற்றிலுமாக வடிந்திருக்கிறது. அதேபோல தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்கள் தவிர மற்ற இடங்களில் வெள்ளம் வடிந்திருக்கிறது. இயல்பு வாழ்க்கை மெல்ல திரும்பி வரும் நிலையில், இம்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் எப்போது வழங்கப்படும் என்று கேள்விகள் எழுந்தன.
மழை வெள்ள பாதிப்பு குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நிவாரணம் குறித்தும் விளக்கமளித்துள்ளார். அதாவது "இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு. தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது. தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 60% இடங்களில் மின்சாரம் இல்லை. தண்ணீர் வடிந்ததும் மின் இணைப்பு சீர் செய்யப்படும்.
ராமநாதபுரம், குமரியில் இருந்து 326 படகுகள் கொண்டு வரப்பட்டு மீட்பு பணி நடக்கிறது. வெள்ளம் வடிந்ததும் சேதம் கணக்கிடப்பட்டு நிவாரணம் வழங்கப்படும். மக்களை முழுமையாக மீட்பதே எங்களின் முதன்மையான பணி. இன்னும் சில கிராமங்களில் மக்களை மீட்க வேண்டியதுள்ளது. வெள்ளம் முழுமையாக வடிந்த பிறகு, சேதங்கள் கணக்கிடப்படும். பின்னர் இது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்த பிறகு நிவாரணம் அறிவிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications