வறட்சி - காவிரி மாவட்ட அதிகாரிகளுடன் வீரபாண்டி ஆறுமுகம் ஆலோசனை
சென்னை: தென் மேற்குப் பருவ மழை பொய்த்துள்ளதால் காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களின் விவசாயத்துறை அதிகாரிகளுன் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இது தொடர்பாக வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலாளர் க.நந்தகிஷோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...
பருவமழை பொய்த்ததால் காவிரி பாசன பகுதியில் காரீப் பருவத்தில் இயல்பான சாகுபடி பரப்பான 1.40 லட்சம் ஹெக்டேருக்கு மாறாக 79,800 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி பாசனப் பகுதியில் சாகுபடி செய்யப்பட்ட பரப்பினை பாதுகாக்கவும், சம்பா பருவத்தினை உரிய காலத்தில் மேற்கொள்ளவும் 28.7.2009-ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
இது தொடர்பாக, 24.8.2009-ல், வேளாண்மை துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசுச் செயலாளர், வேளாண்மை ஆணையர், தோட்டக்கலை இயக்குநர், வேளாண்மை விற்பனைத் துறை ஆணையர், வேளாண்மைப் பொறியியல் துறை தலைமைப் பொறியாளர், விதைச்சான்றுத் துறை இயக்குநர் மற்றும் சிறப்புச் செயலாளர், பொதுப்பணித்துறை ஆகிய உயர் அலுவலர்களுடன் சேலத்திலிருந்து புறப்பட்டு, கல்லணை மற்றும் காவிரி ஆற்றின் பாசனப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பார்வையிடுகிறார்.
பின்னர், சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பாதுகாப்பது குறித்தும், சாகுபடி செய்யப்படாத பரப்பில் சம்பா சாகுபடியை முன்னதாகவே தொடங்குவது குறித்தும் டெல்டா மாவட்டங்களின் வேளாண்மைத் துறை மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களின் ஆய்வுக் கூட்டம், வேளாண்மைத்துறை அமைச்சரின் தலைமையில் தஞ்சாவூரில் ஆகஸ்டு 24-ந் தேதி மாலை 5.00 மணி அளவில் நடைபெற உள்ளது.
மறுநாள் 25-ந்தேதியன்று, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை பார்வையிடவும், சம்பா சாகுபடிக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு, இன்னும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளின் கருத்துக்களை அறியவும், வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கவும் வேளாண் அமைச்சர் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications