தமிழகத்தில் போதுமான உரம் உள்ளது: பழனி மாணிக்கம்
தஞ்சை: காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் சாகுபடிப் பணிகளுக்குத்த தேவையான உரம் இருப்பு உள்ளது. எனவே விவசாயிகள் கவலை கொள்ளத் தேவையில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் கூறியுள்ளார்.
குறுவை சாகுபடிக்கு கல்லணை திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம் செய்தியாளர்களிடம் கூறுகையில்,காவிரி டெல்டா விவசாயத்திற்கு தேவையான உரங்கள் கூட்டுறவு சங்கங்களிலும், கடைகளிலும் தேவையான அளவு கையிருப்பு உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் யூரியா 1,267 டன், டிஏபி 710 டன், பொட்டாஸ் 587 டன், இதர உரங்கள் 524 டன் உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் யூரியா 525 டன், டிஏபி 276 டன், பொட்டாஸ் 201 டன், இதர உரங்கள் 117 டன் உள்ளது.
நாகை மாவட்டத்தில் யூரியா 1,140 டன், டிஏபி 570 டன், பொட்டாஸ் 216 டன், இதர உரங்கள் 119 டன் உள்ளது.
இவை தவிர குடோன்களில் யூரியா 1,471 டன் , டிஏபி 2,230 டன், பொட்டாஸ் 782 டன், இதர உரங்கள் 437 டன் தயார் நிலையில் உள்ளது.
தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 145 கோடி ரூபாய் கடன் வழங்கப்படும். இவை தவிர தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலும் கடன் வழங்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications