விவசாயிகள் முன்னேற விஞ்ஞானிகள் ஏணியாக செயல்பட வேண்டும்: கருணாநிதி பேச்சு
கோவை: விவசாய சமுதாயத்தின் முன்னேற்றத்துக்கு விஞ்ஞானிகள் ஏணியாக செயல்பட வேண்டும் என்று கோவை வேளாண் அறிவியல் மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
கோவை தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வேளாண் அறிவியல் மையங்களின் 4வது தேசிய அறிவியல் மாநாட்டில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகையில்,
இந்தியாவில் விவசாய மேம்பாட்டில் தமிழகம் இதுவரை முன்னோடியாக திகழ்ந்துகொண்டு இருக்கிறது. வேளாண் அறிவியல் நிலையங்களின் முக்கிய செயல்பாடுகள் விவசாய உற்பத்தியை அதிகரிப்பது, தரத்தை மேம்படுத்துவது, விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கச்செய்வது, விவசாய சமுதாயத்தின் சமூக, பொருளாதாரத்தை மேம்படுத்துவது ஆகியவை ஆகும்.
இவற்றை நிறைவேற்றுவதற்கு வேளாண் அறிவியல் நிலையங்கள் விவசாயிகளுக்கு போதிய அறிவை புகுத்தவேண்டும். கள விளக்க பயிற்சிகள், பண்ணை பயிற்சிகள், கண்காட்சிகள், தகவல் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் பயிற்சிகள் அளிக்கவேண்டும். புதிய தொழில்நுட்பங்களை கிராமப்புற விவசாயிகளுக்கு கொண்டு செல்வதில் விஞ்ஞானிகள் முக்கிய பங்காற்ற வேண்டும்.
மண்ணின் மைந்தர்களாக இருப்பவர்கள் விவசாய குடிமக்கள். அவர்களின் சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு ஏணிகளாக விஞ்ஞானிகள் செயல்படவேண்டும்.
விவசாய தொழிலாளர்கள் நகர்ப்புறங்களை நாடிச் செல்வதால் வேளாண் சாகுபடி பரப்பளவு சுருங்கி உள்ளது. இந்த சூழலில் வேளாண் உற்பத்தியை பெருக்கும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.
உலக அளவில் நம் நாட்டின் விவசாயம் நல்ல நிலையில் உள்ளது. நம் நாடு கரும்பு உற்பத்தியில் 2வது இடத்திலும், அரிசி, கோதுமை உற்பத்தியில் 2வது இடத்திலும், பருப்பு உற்பத்தியில் முதலிடத்திலும், எண்ணெய் வித்து உற்பத்தியில் 3வது இடத்திலும், காய்கறி, பழங்கள் உற்பத்தியில் 2வது இடத்திலும் உள்ளது என்றார் முதல்வர்.
முன்னதாக, மாநாட்டை மத்திய விவசாய துறை அமைச்சர் சரத்பவார் தொடங்கிவைத்து பேசினார்.
நாட்டில் இந்திய அளவிலான வேளாண் அறிவியல் மையங்களை சேர்ந்த 600 விஞ்ஞானிகளும், விவசாய பல்கலைக்கழகங்களை சேர்ந்த 400 விஞ்ஞானிகளும், 200 இளம் விஞ்ஞானிகளும் கலந்துகொண்டனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications