Gold Price Today: மீண்டும் சர்ப்ரைஸ் கொடுத்த தங்கம் விலை.. இன்றும் அதிரடியாக சரிந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி!

  • சென்னை: தங்கம் விலை (Gold Price Today) தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன் தினமும் சவரனுக்கு ரூ.800 குறைந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்துள்ளது. வெள்ளி விலை எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் சென்னையில் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் காரணமாக தங்கம் விலை கடந்த ஒரு ஆண்டாக விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வந்தது. நடப்பு ஆண்டிலும் தொடக்கத்தில் தங்கம் விலை தாறுமாறாக அதிகரித்தது.

    Advertisement

    தங்கம் விலை

    பிப்ரவரி மாதம் வரை உச்சம் தொட்ட தங்கம் விலை பிறகு சரிய தொடங்கியது. கடந்த 8 மாதங்களாக பெரிய அளவில் குறையவில்லை என்றாலும் ஒரு சவரன் ரூ.1.15 லட்சம் என்ற அளவில் தொடர்ச்சியாக இருந்து வருகிறது. திடீரென ஏறுவதும் பின்னர் சரிவதுமாக இருந்து வருகிறது.

    கடந்த வெள்ளிக்கிழமை சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.800 குறைந்து ரூ.1,09,400-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 100 குறைந்து ரூ.13,675-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம் விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் இருந்தது.

    Advertisement

    இன்றைய ரேட் என்ன?

    நேற்று வாரத்தின் முதல் நாள், தங்கம் விலை ஏறவும் இல்லாமல், இறங்கவும் இல்லாமல் மாற்றமின்றி அதே விலைக்கு விற்பனை ஆனது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,400-க்கும், ஒரு கிராம் ரூ.13,675/-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக சரிந்துள்ளது.

    சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.120 குறைந்து ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 குறைந்து ரூ13.660-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்தவித மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    Advertisement

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை

    06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280 (இன்று)
    05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
    03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

    02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
    01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
    30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
    29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
    28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
    27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

    Advertisement

    25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
    24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
    23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
    21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

    20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
    18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
    17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080

    1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
    1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

    English Summary

    Gold Price Today: The price of gold continues to fall. After dropping by Rs. 800 per sovereign the day before yesterday, the price has decreased again today. Today alone, the price of gold has dropped by Rs. 120 per sovereign. Meanwhile, the price of silver remains unchanged, selling at Rs. 245 per gram in Chennai.