Gold Rate Today: தங்கம் விலை மொத்தமாக காலி.. சவரனுக்கு ரூ.4,080 சரிந்தது! பொதுமக்கள் ஹேப்பி

  • சென்னை: சர்வதேச சந்தையில் தங்கம் விலை இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்காது என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம். இதன் எதிரொலியாகச் சென்னையிலும் ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,080 சரிவு ஏற்பட்டுள்ளது.

    Advertisement

    இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் விலை சீராக சரிந்து வருகிறது. சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை தங்கத்தின் விலை 2.4 சதவீதம் சரிந்து, ஒரு அவுன்ஸ் 4,041.39 டாலராக குறைந்தது. கடந்த ஆகஸ்ட் மாதத்திற்கு பிறகு தங்கம் விலை இந்தளவுக்கு சரிவது இதுவே முதல்முறையாகும்.

    Advertisement

    தங்கம் விலை

    இப்போது சர்வதேச அளவில் இரு முக்கியமான கவலைகள் உள்ளன. ஒன்று மத்திய கிழக்கில் சவுதி மீது ஹவுதி அமைப்பினர் நடத்தும் தாக்குதல்கள்.. ஹவுதி தாக்குதல்களால் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற கவலை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்து, ஐந்து மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது.

    காரணங்கள்

    அடுத்து இரண்டாவது காரணம் எண்ணெய் விலை அதிகரிப்பது பணவீக்கத்தை மேலும் உயர்த்தக்கூடும். இதனால் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் வட்டி விகிதங்களை நீண்ட காலத்திற்கு குறைக்காது. பொதுவாகப் பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் கருதப்படுகிறது. ஆனால், தங்கத்திலிருந்து வட்டி வருமானம் கிடைப்பதில்லை. எனவே, வட்டி விகிதங்கள் உயரும் போது, தங்கத்தின் மீதான முதலீடு குறையலாம்.

    Advertisement

    அமெரிக்காவில் கடந்த வாரம் பணவீக்கம் தொடர்பான டேட்டா வெளியாகி இருந்தது. அதில் எதிர்பார்த்தை காட்டிலும் பணவீக்கமும் அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்தாலே அமெரிக்க மத்திய வங்கி நிச்சயம் வட்டி விகிதத்தை உயர்த்தும் இது தங்கம் விலை சரிவுக்கு காரணமாக இருக்கும். இந்த மாதம் அமெரிக்கா தனது வட்டி விகிதங்களை உயர்த்தாது என்றாலும் டிசம்பரில் நிச்சயம் உயர்த்தும் என்றே தெரிகிறது.

    இத்தோடு சேர்த்து ரூபாய் மதிப்பும் கூட உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.96.78ல் இருந்து ரூ.94.78ஆக உயர்ந்துள்ளது. இதுவும் தங்கம் விலை சரிய இன்னொரு காரணமாக இருக்கிறது.

    Advertisement

    சரியும் தங்கம் விலை

    இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.4,080 சரிவு ஏற்பட்டுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,400 குறைந்து ரூ.1,04,580-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.175 சரிந்து ரூ.13,060-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.225-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களில் தங்கம் விலை

    22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,04,580

    22-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,880

    21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120

    Advertisement

    21-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,120

    20-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,07,920

    19-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,560

    18-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280

    17-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,280

    16-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120

    15-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,120

    14-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,08,720

    English Summary

    Gold Rate Today and silver rate today (தங்கம் விலை இன்று) [23 October 2026]: தாறுமாறாக சரியும் தங்கம் விலை