சிப்ஸ் பாக்கெட் வடிவத்தில் வந்த எமன்.. குழந்தைகளுக்கு குர்குரே தரீங்களா? உஷார் பெற்றோர்களே!

  • பெங்களூர்: கர்நாடகாவில் சிப்ஸ் பாக்கெட்டில் இருந்த பொம்மை பந்தை தவறுதலாக விழுங்கிய குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Advertisement

    குழந்தைகளை கவர்வதற்காக சிப்ஸ் பாக்கெட்டுகளில் குட்டி, குட்டி பொம்மைகளை வைத்து உணவு பொருள் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. ஆனால், தவறுதலாக இந்த பொம்மைகளை குழந்தைகள் விழுங்கும் அபாயம் இருக்கிறது. இதை பெற்றோர்கள் பலமுறை எச்சரித்தும் கூட.. உணவு விற்பனை நிறுவனங்கள் இதை நிறுத்தவில்லை. இதனால் கர்நாடகாவில் குழந்தை உயிர் ஒன்று பறிபோயிருக்கிறது.

    Advertisement

    மைசூர் மாவட்டத்தில் உள்ள கௌரிபுரா கிராமத்தில் 5 வயது சிறுவன் முகுந்த மயூர், குர்குரே பாக்கெட்டுடன் இலவசமாக வந்திருந்த பொம்மை பந்தை விழுங்கியிருக்கிறார். அதாவது பந்தை வைத்து சிறுவன் விளையாடியிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார். பந்து சிறுவனின் தொண்டையில் சிக்கிக்கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் சில நிமிடங்களில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பந்தை சிறுவன் விழுங்கியதுதான் உயிரிழப்புக்கு காரணம் என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.

    லேஸ், குர்குரே போன்ற சர்வதேச நிறுவனங்களின் உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் இதுபோன்ற சிறிய பொம்மைகள் இருக்காது. காரணம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் இதற்கு அனுமதியை கொடுக்கவில்லை என்பததை அந்நிறுவனங்கள் தெரிந்து வைத்து, விதிமுறைகளை பின்பற்றி வருகின்றன.

    Advertisement

    ஆனால் சில லோக்கல் சிப்ஸ் கம்பெனிகள் தங்களின் பொருட்கள் சீக்கிரம் குழந்தைகளிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காகவும், எளிதில் குழந்தைகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் சிப்ஸ் பாக்கெட்டுக்குள் பொம்மைகளை அடைத்து விற்பனை செய்கிறார்கள்.

    சிப்ஸ் பாக்கெட்டில் அடைக்கப்படும் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடுவார்கள் என்கிற அபாயத்தை தாண்டி.. இதுபோன்ற பொம்மைகளை தயாரிக்க தரம் குறைந்த பிளாஸ்டிக் பொருட்கள்தான் பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இந்த பிளாஸ்டிக் உணவு பொருட்களுடன் கடந்து ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். இதுவும் குழந்தைகளுக்கு ஆபத்தானது.

    எனவே, உணவு நிறுவனங்கள் பொம்மைகளை அடைத்து விற்பதை தடுக்க வேண்டும் என்று பெற்றோர் இது குறித்து பலமுறை புகார் அளித்தும் கூட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்று சொல்லப்படுகிறது. உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இதுபோன்ற விதி மீறல்களை கண்டறிந்து அதை முற்றிலுமாக தடுத்து நிறுத்த வேண்டும் என்பதே பெற்றோர்களின் தொடர் கோரிக்கையாக இருக்கிறது.

    English Summary

    Karnataka: A tragic incident in Karnataka, where a child died after accidentally swallowing a toy ball found inside a packet of chips, has caused shock. The police have registered a case and are conducting an investigation.