நள்ளிரவில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. அலறியதால் தப்பியோடிய இளைஞர்.. திருப்பத்தூரில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிய 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதங்களாகிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்று அரசியலை முன்வைத்து ஆட்சிக்கு வந்தனர். திமுக ஆட்சியில் ஏற்பட்ட சட்டம் ஒழுங்கு பிரச்சனையை தவெக தலைவர் விஜய் தீவிரமாக பொதுமக்களிடம் முன்வைத்தார். ஆனால், தவெக ஆட்சிக்கு வந்தும் காட்சிகள் மாறவில்லை. கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

Tirupattur

சட்டம் ஒழுங்கு பிரச்சனை தீவிரமடைந்து வரும் இந்நிலையில், திருப்பத்தூர் அருகே வீட்டிற்கு வெளியே தூங்கிய 15 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிறுமியிடம் அத்துமீறல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே படுத்து உறங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது,‌ மது போதையில் இருந்த நபர் ஒருவர் சிறுமியின் அருகில் படுத்துக் கொண்டு அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

சிறையில் அடைப்பு

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிறுமியிடம் அத்துமீற முயன்றது கனமந்தூர் பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் என்பவரின் மகன் ஜூலியன் (23) என்பது தெரியவந்தது. ஜூலியன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+