டிரம்ப் செய்த காரியம்.. இனி தங்கம் விலையை பிடிக்க முடியாது.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கம் என மாறி மாறியே இருந்து வருகிறது. இதனால் மக்கள் குழப்பத்தில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். இதற்கிடையே பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் தங்கம் விலை ஏன் இதுபோல இருக்கிறது.. வரும் காலத்தில் அது எப்படி இருக்கும் என்பதை விளக்கியுள்ளார்.

கடந்த சில காலமாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கம் என மாறி மாறியே இருந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அதாவது மே 21ம் தேதி ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.8930ஆக இருந்தது. நேற்று (மே 30) அது ரூ.8920ஆக இருக்கிறது. ஆனால், இந்த 10 நாட்களில் அது 4 முறை விலை ஏறியுள்ளது. 4 முறை விலை குறைந்துள்ளது. இரு நாட்கள் ரேட் மாறாமல் இருந்துள்ளது.

Anand Srinivasan gold personal finance

தங்கம் விலை

ஆனாலும், கடந்த 10 நாட்களாகத் தங்கம் விலை ரூ.8850- ரூ.8890 என்ற ரேஞ்சிற்குள்ளேயே இருந்து வந்துள்ளது. தங்கம் விலை இதுபோல நிலையாக இருந்து நீண்ட காலம் ஆகிவிட்டது. ஆனால், தங்கம் விலை எத்தனை காலம் இதுபோல இருக்கும்.. அது வரும் காலம் எப்படி இருக்கும்.. இதில் இருந்து தங்கம் விலை உயருமா.. இல்லை குறையுமா என பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. இதற்கான பதிலை பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் வழங்கியுள்ளார்.

டிரம்ப் செய்யும் காரியம்

இது தொடர்பாக அவர் தனது யூடியூப் சேனலில், "டிரம்ப் இப்போது its a beautiful bill என்ற சட்டத்தைக் கொண்டு வரப் பார்க்கிறார். அந்த மசோதா நிறைவேறிவிட்டால் அமெரிக்காவில் பற்றாக்குறை அதிகரிக்கும். அதாவது வரவுக்கும் செலவுக்கும் இடையே உள்ள வித்தியாசம். வரவு குறையும் செலவு அதிகரிக்கும்.. இதனால் செலவுகளைச் சமாளிக்க அமெரிக்கா கடன் வாங்கும் தொகையும் அதிகரிக்கும். இதனால் நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்.

ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 3186 டாலர் என இருந்தது. இது உடனடியாக 3240 டாலர் வரை போனது. இது இன்னும் அதிகரிக்கவே செய்யும். இதே டிரெண்ட் தொடர்ந்தால் நீண்ட கால நோக்கில் தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும். ரஷ்யா உக்ரைன் இடையே மோதல் முடிவுக்கு வந்து.. அமைதி திரும்பினால் தங்கம் விலை சற்றே குறையும். ஆனால், அதுவும் கூட தற்காலிகமானதாகவே இருக்கும்.

இரு நாடுகள் விடாது

ரஷ்யாவும் சீனாவும் தங்கத்தை அதிகம் வாங்கி வைத்துள்ளன. இதனால் அவர்கள் தங்கள் தங்க ரிசர்வின் மதிப்பைக் குறைய விட மாட்டார்கள். தங்கம் விலை ஓரளவுக்கு மேல் குறைந்தால் உள்ளே புகுந்து வாங்க ஆரம்பித்துவிடும்" என்றார். அதாவது ரஷ்யா, சீனா உட்பட சில நாடுகள் கடந்த சில ஆண்டுகள் தங்கள் தங்க ரிசர்வை பல மடங்கு அதிகரித்துள்ளன. தங்கத்தின் மதிப்பு சரிந்தால் அதன் ரிசர்வ் குறைந்துவிடும் என்பதால் தங்கம் விலை ஓரளவுக்கு மேல் குறைந்தால் உடனடியாக இந்த நாடுகள் உள்ளே புகுந்து தங்கத்தை வாங்கி, விலை பெரியளவில் குறைவதே தடுக்கும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது.

அமெரிக்கா

அவர் மேலும் பேசுகையில், "அதேபோல மற்றொருபுறம் அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தைக் குறைத்தாலும் கூட தங்கம் விலை அதிகரிக்கத் தொடங்கிவிடும். வட்டியைக் குறைக்க வேண்டும் என்றால் அமெரிக்காவில் பணவீக்கம் குறைய வேண்டும். டிரம்ப் ரெசிப்ரோகல் வரி அது இது எனப் போட்டுள்ளார். எனவே, பணவீக்கம் நிஜமாகவே கட்டுக்குள் வந்துவிட்டதா என்பதைத் தெரிந்து கொண்டு குறைக்கச் செப்டம்பர் வரை ஆகிவிடும். அப்படியே குறைத்தாலும் அது நமக்கு நல்லது தான். தங்கம் விலை அதிகரிக்கவே செய்யும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+