Cognizant: மெகா பணிநீக்கம் திட்டம்.. இந்திய ஐடி ஊழியர்களுக்கு தான் வலை.. சிக்கினா சின்னாபின்னம் தான்!

Subscribe to Oneindia Tamil

உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான காக்னிசன்ட் (Cognizant) அதிகளவிலான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த பணிநீக்கம் மூலம் உலகம் முழுவதும் 12,000 முதல் 15,000 ஊழியர்கள் பாதிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் அதிகப்படியான பாதிப்பு இந்தியாவில் தான் இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

காக்னிசன்ட் நிறுவனம் இதை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்றாலும், இந்நிறுவனத்தில் உள் வட்டாரங்கள் தகவல்களை பார்க்கும் போது இந்தியாவில் அதிகப்படியான பணிநீக்கம் இருக்கும் இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Cognizant Layoff IT Cognizant Layoffs 2025 India Job Cuts Cognizant Project Leap Cognizant IT Industry Restructuring Freshers Impact IT Sector Cognizant layoffs 2025 Cognizant 12 000 to 15 000 job cuts Project Leap Cognizant India impact Cognizant layoffs Cognizant severance cost IT industry pyramid model shift freshers job loss IT sector Cognizant workforce reduction Tamil Nadu IT jobs affected Cognizant restructuring 2025 upskilling for IT professionals Cognizant India layoffs estimate global IT services transformation leaner IT teams trend client demand skilled professionals 2025 12 000 15 000

இந்தியாவில் அதிகப்படியான பணிநீக்கம்

காக்னிசன்ட் நிறுவனத்தில் உலக அளவில் 3,57,000க்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இதில் 2,50,000க்கும் அதிகமானோர் இந்தியாவில் பணியாற்றுகின்றனர்.

இந்தியாவில் சம்பளம் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாலும், தற்போது மாறி வரும் பிரமிட் அமைப்பில் செலவைக் குறைக்கும் நோக்கில் இங்குதான் அதிக ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மாற்றம் இந்திய ஐடி ஊழியர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராஜெக்ட் லீப் திட்டம்

இந்தப் பணி நீக்கம் 'ப்ராஜெக்ட் லீப்' என்ற பெயரில் நடைபெறும் பெரிய மறுசீரமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 29 அன்று இந்நிறுவனம், பணிநீக்கம் தொடர்பான severance cost ஆக 230 மில்லியன் முதல் 320 மில்லியன் டாலர் வரை செலவிடப்படும் என அறிவித்தது.

தொழில்துறையில் அடிப்படை மாற்றம்

இந்த முடிவு வெறும் செலவுக் குறைப்பு மட்டுமல்ல. தகவல் தொழில்நுட்ப சேவைத் துறையில் நடைபெறும் அடிப்படை மாற்றத்தின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது.

காலம் காலமாக ஐடி நிறுவனங்கள் 'பிரமிட் மாடல்' எனப்படும் அமைப்பைப் பின்பற்றின. அதாவது, நிறுவனத்தில் கீழ் நிலையில் அதிகப்படியான ஃப்ரெஷர் ஊழியர்களை பணியில் அமர்த்தப்படும். மேலே சில அனுபவம் வாய்ந்தவர்கள்.

ஆனால், இப்போது வாடிக்கையாளர்கள் இந்த மாடலை ஏற்க மறுக்கின்றனர். ஏஐ வந்த பின்பு வேகம், ஊழியர் அடிப்படையிலான வருவாய், அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் தேவை ஆகியவை முக்கியமானதாக மாறியுள்ளது.

இதனால் பிரஷ்ஷர்களை பணியில் அமர்த்துவதும், பயிற்றுவிக்கும் செலவுகளை குறைப்பதும் ஐடி நிறுவனங்களுக்கு சுமையாக மாறி வருகிறது. இதனால் ஏஐ தொழில்நுட்ப அடிப்படையில் பணியாற்ற தயாராக இருக்கும் திறமையான ஊழியர்களை மட்டுமே ஐடி நிறுவனங்கள் புதிதாக பணியில் அமர்த்தி வருகிறது.

இதனால் தேவையற்ற, குறைந்த அனுபவம் கொண்ட துவக்க நிலை மற்றும் பிரஷ்ஷர் ஊழியர்களை பணியில் இருந்து நீக்க காக்னிசென்ட் முடிவு செய்துள்ளது. அப்படி பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ப்ராஜெக்ட் லீப் திட்டத்தின் வாயிலாக severance pay கொடுக்கவே 250 மில்லியன் டாலர் அளவிலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதன் மூலம் அதிக ஊழியர்களையும், லேட்டரல் ஊழியர்கள் அதிகம் கொண்ட இந்தியாவில் தான் பணிநீக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃப்ரெஷர்களுக்கு சவால்

இந்திய ஐடி சேவை துறையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் புதியவர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் நிலையை உருவாக்கியுள்ளது. தொடர்ந்து தங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் திறன் கொண்ட ஊழியர்களுக்குத்தான் எதிர்காலத்தில் வாய்ப்பு அதிகம் இருக்கும். இது தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் ஒரு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+