ஸ்டாலின் செய்த மாஸ் சம்பவம்.. ஃபாக்ஸ்கான் புதிதாக ₹15,000 கோடி முதலீடு.. 14000 பேருக்கு வேலை உறுதி
சென்னை: ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ₹15,000 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. சென்னை அருகே மிகப்பெரிய ஆலையையை அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் தொழிற்சாலை தொடங்கப்பட்டால், 14000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஃபாக்ஸ்கான் இந்தியாவின் பிரதிநிதி ராபர்ட் வூ, இதனை உறுதி செய்துள்ளார். இந்த தகவலை தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உறுதி செய்துள்ளார்.
சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஏராளமான சிப்காட் வளாகங்களை அரசு அமைத்துள்ளது. இங்கு ஐடி நிறுவனங்கள், ஆட்டோ மொபைல் தொழிற்சாலைகள், கனரக உதிரி பாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. மேலும் கம்ப்யூட்டர், செல்போன், வீட்டு உபயோகப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளும் அதிகாக உள்ளன. அதேபோல் உணவுப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி தொழில் நிறுவனங்களும் அதிகமாக செயல்படுகின்றன. இந்த நிறுவனங்கள் மூலம் பல லட்சம் மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறார்கள்.

இந்தியாவிலேயே சென்னை தான் ஆட்டோ மொபைல், செல்போன் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. குறிப்பாக சொல்வது என்றால், சென்னையை அடுத்து உள்ள ஸ்ரீபெரும்புதூர் சுங்குவார்சத்திரம் சிப்காட் வளாகத்தில் இதற்காக சிறப்பு பொருளாதார மண்டலம் செயல்பட்டு வருகிறது. மேலும் ஒரக்கடம் பகுதியிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. சுங்கவார்சத்திரம் அருகே தான் ரூ.2,601 கோடி முதலீட்டில் 3.55 லட்சம் சதுர அடி பரப்பளவில் பாக்ஸ்கான் ஆலை செயல்பட்டு வருகிறது. பாக்ஸ்கான் ஆலையில், சுமார் 40 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த ஆலையில் தான் ஆப்பிள் ஐபோன் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த ஐபோன் தான் இந்தியா முழுவதும் விற்பனைக்கு செல்கிறது. கடந்த நிதியாண்டில், 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. 2024-25 நிதியாண்டில் பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் தனது வருவாயை இரட்டிப்பாக்கி சுமார் ரூ.1.7 லட்சம் கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டது.
இந்நிலையில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மேலும் ₹15,000 கோடி முதலீடு செய்வதாக உறுதி அளித்துள்ளது. சென்னை அருகே மிகப்பெரிய ஆலையையை அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் தொழிற்சாலை தொடங்கப்பட்டால், 14000 பேருக்கு புதிதாக வேலை கிடைக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஃபாக்ஸ்கான் இந்தியாவின் பிரதிநிதி ராபர்ட் வூ,இதனை உறுதி செய்துள்ளார்.
இது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா,தமிழ்நாட்டின் பொறியியல் மற்றும் உயர் தொழில்நுட்ப உற்பத்தித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமளிக்கும் வகையில், ஃபாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் மிகப்பெரிய முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு உறுதிமொழியை அளித்துள்ளது. ரூ.15,000 கோடி முதலீடு மூலம் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் . தமிழ்நாட்டை இந்தியாவின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக மாற்றும் முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஃபாக்ஸ்கானின் இந்திய பிரதிநிதி ராபர்ட் வூ முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஒப்பந்தத்தை உறுதி செய்தார். மின்சாதனங்கள் உற்பத்தித் துறையில் தமிழ்நாட்டுக்கு மேலும் ஒரு பெரிய முன்னேற்றம் அடையும். இந்த முதலீட்டை விரைவுபடுத்தவும், செயல்பாடுகளைச் சீராகக் கண்காணிக்கவும், தமிழ்நாட்டின் முதலீட்டு மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவின் முதல் பிரத்யேக 'ஃபாக்ஸ்கான் மேசை' (Foxconn Desk) அமைக்கப்பட உள்ளது. இது பணிகளை விரைவாக முடிக்க உதவும்.
ஃபாக்ஸ்கான் நிறுவனம் தனது அடுத்த கட்ட உற்பத்தியான மதிப்புக் கூட்டு உற்பத்தி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மேம்பட்ட தொழில்நுட்ப செயல்பாடுகளை தமிழ்நாட்டிற்குக் கொண்டுவரவுள்ளது" இவ்வாறு டிஆர்பி ராஜா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications