வெறும் ரூ.10,000 போட்டிருந்தால்.. இன்று லட்ச கணக்கில் லாபம்.. தங்கத்தை தூக்கி சாப்பிடும் வெள்ளி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் மற்றும் வெள்ளி இரண்டுமே மாறி மாறி ரேஸ் போவது போலத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதிலும் தற்போது தங்கத்தை விடவும் வெள்ளியின் ஏற்றம் பயங்கரமாக இருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் ஒரு லட்ச ரூபாயை வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. இப்போது எது எவ்வளவு தொகையாக மாறி இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சமீபத்திய மாதங்களில் தங்கத்தைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வெள்ளி ராக்கெட்டில் ஏறிப் பறந்துவிட்டது. இதனால் பொதுமக்கள் பலரும் தங்கத்திற்குப் பதிலாக வெள்ளி பக்கம் திரும்பியுள்ளனர். வெள்ளி தங்களுக்கு அதிக லாபம் தரும் என நம்புகிறார்கள்.

Nearly 1 800 Returns Just Rs 10k Lakh Invested in Silver in 2005 Grows to Rs 1 9 Lakh by 2025

வெள்ளி

தங்கம் விலை ஒரு கிராமே கூட ரூ.13,000ஐ நெருங்கிவிட்டது. வெள்ளி விலை இப்போது தான் கிராமுக்கு ரூ.230 என்ற ரேஞ்சுக்கு சென்றுள்ளது. தங்கத்தை போலவே நிச்சயம் வெள்ளி விலையும் உச்சம் தொடும் என்பதாலேயே மக்கள் ஆர்வமாக வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள். வெள்ளி முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே வல்லுநர்களும் சொல்கிறார்கள்.

20 ஆண்டுகளுக்கு முன்பு ஒருவர் வெள்ளியில் முதலீடு செய்திருந்தால்.. அவரிடம் இப்போது எவ்வளவு தொகை இருக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.. கடந்த 20 ஆண்டுகளில், வெள்ளி விலை 1,500%க்கும் மேல் அதிகரித்துள்ளதாம்.. ப்ளூம்பெர்க் தகவலின்படி 2005 டிசம்பர் 23ம் தேதி ஒரு கிலோ வெள்ளி ₹12,650ஆக இருந்தது. அப்போது நீங்கள் ₹1 லட்சம் முதலீடு செய்திருந்தால் உங்களுக்கு 7.9 கிலோ வெள்ளி கிடைத்திருக்கும்.

எவ்வளவு லாபம்

இப்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளி விலை உச்சத்திற்குப் போய்விட்டது. இன்றைய தினம் ஒரு கிலோ வெள்ளி ரூ.2.44 லட்சமாக இருக்கிறது. அதாவது 7.9 கிலோவுக்கு ரூ.19.27 லட்சம் இருக்கும். அதாவது 20 ஆண்டுகளில் உங்களுக்கு ₹18,27,600 லாபம். அதாவது 1827% லாபமாகும். அதாவது நீங்கள் ரூ.10,000ஐ முதலீடு செய்திருந்தாலும் கூட அது கிட்டத்தட்ட ரூ.1.9 லட்சமாக மாறி இருக்கும்.

எச்சரிக்கை

அதேநேரம் தங்கத்தை போலவே வெள்ளி ஏறிக் கொண்டே இருக்கும் எனச் சொல்ல முடியாது. வெள்ளி விலை எந்தளவுக்கு உயர்கிறதோ.. அதே அளவுக்கு அது சரியவும் கூட வாய்ப்பு இருக்கிறதாம். சர்வதேச சந்தை, தொழில் தேவையைப் பொறுத்து ஒரேயடியாக 30% வரை கூட வெள்ளி விலை சரிய வாய்ப்பிருக்கிறது என்றும் அதை நிராகரித்துவிட முடியாது என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.

தங்கம் vs வெள்ளி

தங்கத்தை பொறுத்தவரை அது பெரும்பாலும் எங்கும் பயன்படாது. தொழில்துறையில் தங்கத்தின் தேவை மிக மிக குறைவு.. அதிகபட்சம் தங்கத்தை வைத்து ஆபரணம் செய்து போடலாம்.. அது மட்டுமே முக்கிய பயன். ஆனால், வெள்ளி அப்படி இல்லை.. சூரிய மின்சக்தி, டேட்டா மையங்கள் மற்றும் மின்மயமாக்கல் போன்ற பல்வேறு தொழில்துறை தேவைகளுக்கும் வெள்ளி பயன்படுகிறது. இந்த டிஜிட்டல் உலகில் வெள்ளியின் தேவை மேலும் அதிகரிக்கும் என்றே சொல்லப்படுகிறது.

இது தொடர்பாக வல்லுநர்கள் மேலும் கூறுகையில், "தங்கமும் வெள்ளியும் முதலீட்டிற்கு நல்லது என்றாலும் அது எப்போதும் உயர்ந்து கொண்டே இருக்கும் என சொல்ல முடியாது. எந்தவொரு முதலீட்டைப் போலவும் ஏற்ற இறக்கம் மாறி மாறியே இருக்கும். சீராகத் தங்கள் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். நிலைத்தன்மைக்காகத் தங்கத்தை வைத்திருக்க வேண்டும்.. வளர்ச்சிக்காக வெள்ளியை வைத்திருக்க வேண்டும்" என்றார்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+