டிரம்ப் பேச்சால் மொத்தமும் தலைகீழாக மாறியது.. மறுபடியும் முதல்ல இருந்தா? தங்கம் விலையில் டிவிஸ்ட்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளை அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் 'மிகக் கடுமையாக' மேற்கொள்ளப் போவதாக உறுதியாக எச்சரித்துள்ளார். வெள்ளிக்கிழமை அமெரிக்க மக்களிடம் உரையாற்றிய போது டிரம்ப், 'நாங்கள் எங்கள் இலக்குகளை முழுமையாக அடையும் வரை ஈரான் மீதான தாக்குதலை தொடர்வோம். அமெரிக்காவின் அனைத்து இலக்குகளையும் விரைவில் நிறைவேற்றிவிடுவோம்' என்று கூறினார் டிரம்ப்.
டிரம்ப்-ன் இந்த பேச்சு, போர் விரைவில் முடிவடையும் என்ற நம்பிக்கையை முற்றிலும் சிதைத்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக இருந்த நிலையில் இன்று தலைகீழாக மாறப்போவதற்கான சிக்னல் ஆசிய சந்தை வர்த்தகத்திலும், நேற்றைய அமெரிக்க வர்த்தக சந்தையின் வர்த்தக முடிவும் காட்டியுள்ளது.

ஆசிய சந்தை
டிரம்ப்-ன் இப்புதிய எச்சரிக்கை சர்வதேச பங்குச்சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய சந்தைகள் 1.4 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. ஜப்பான் நிக்கி 1.83 சதவீதமும், ஹாங்காங் சந்தை 1.08 சதவீதமும், இந்தோனேசியா, வியட்நாம் சந்தைகளும் சரிவில் வர்த்தகத்தை துவங்கியுள்ளது.
நேற்றை வர்த்தக முடிவில் அமெரிக்க எக்விட்டி ஃபியூச்சர்ஸ் 1 சதவீதம் வீழ்ச்சியடைந்தன. அமெரிக்காவின் 10 ஆண்டு அமெரிக்க கருவூலப் பத்திர லாபம் 4.36 சதவீதமாக உயர்ந்தது.
எண்ணெய் விலை கடுமையாக உயர்வு
டிரம்ப்பின் உரையைத் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பிரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 105 டாலருக்கு மேல் வர்த்தகமானது. டிரம்ப்-ன் பேச்சுக்கு முன்பு 100 டாலர் அருகில் இருந்த விலை, உரையின்போது 4.2 சதவீதம் உயர்ந்தது.
இன்று காலை கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் வர்த்தகத்தில் அனைத்து கச்சா எண்ணெய் விலையும் 4-5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அச்சம் இன்னும் நீடிப்பதால், எண்ணெய் விலை உயர்வு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம், வெள்ளி விலை சரிவு
போர் பதற்றம் தணியும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டதால் நேற்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை உயரந்தது. இது மிகப்பெரிய சிக்னலாக இருந்தது. ஆனால் டிரம்ப்பின் கடுமையான போர் எச்சரிக்கை காரணமாக இன்று தங்கம் விலை சரிந்துள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் ஸ்பாட் சந்தையில் 1.25 சதவீதம் குறைந்து 4,698.92 டாலராக குறைந்து. வெள்ளி விலையும் 2.89 சதவீதம் சரிந்து 72.9075 டாலராக குறைந்து.
டிரம்ப் பேச்சில் கவனிக்க வேண்டிவை
டிரம்ப் தனது உரையில், 'ஈரானை அடுத்த இரண்டு-மூன்று வாரங்களில் மிகக் கடுமையாகத் தாக்குவோம். அவர்களை அவர்கள் இருக்க வேண்டிய கற்கால யுகத்துக்கு திருப்பிவிடுவோம்' என்று கூறினார். இருப்பினும், ராணுவ நடவடிக்கைகள் தொடரும் நிலையிலும், பேச்சுவார்த்தைகளும் நடைபெறும் என்று அவர் குறிப்பிட்டார். 'எங்கள் இலக்குகள் முழுமையாக நிறைவேறும் வரை இந்த தாக்குதல்களை தொடர்வோம்' என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த உரை, போர் விரைவில் முடிவுக்கு வரும் என்ற முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பை பெரிதும் பாதித்துள்ளது. ஈரான் வளைகுடா பகுதிகளில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களை தாக்குவோம் என அறிவித்த நிலை டிரம்ப் போர் நிறுத்துவது குறித்து பேசினார். ஆனால் தற்போது மீண்டும் போர் தீவிரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார். டிரம்ப்பின் இந்த மாறுப்பட்ட அணுகுமுறை சந்தையை மீண்டும் கீழே தள்ளியுள்ளது.












Click it and Unblock the Notifications