சென்னையில் நிறைய வீடு இஎம்ஐ கட்டாமல் உள்ளது.. லீசுக்கு குடிபோகிறவர்கள் ஏமாறுவது எப்படி?
சென்னை: சென்னையில் மற்றும் அதை சுத்தி எங்கயாச்சும் வீடு லீசுக்கு இருக்குன்னா வாடகை மிச்சம் ஆகும் அப்படின்னு யாரும் அவசரப்பட்டு இருக்க காலெல்லாம் குடுத்து போயிடாதீங்க. கொரோனாவுக்கு அப்புறம் நிறைய வீடு ஈஎம்ஐ கட்டாம கலெக்சனுக்கு போயிருக்கிறது. அந்த மாதிரி வீடுங்க தான் லீசுக்கு வருகிறது. அந்த வீடுகளில் லீசுக்கு குடிபோகிறவர்கள் எப்படி ஏமாறுகிறார்கள் என்று பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னையில் சர்வ சாதாரணமாக 20000 ரூபாயில் இருந்து 40 ஆயிரம் வரை நடுத்தர வீடுகளுக்கு வீட்டு வாடகை உள்ளது. மிக சிறிய, 1 பிஹெக்கே வீடுகள் கூட 10000 முதல் 15000 ரூபாய்க்கு மேல் உள்ளது. சென்னையின் முக்கிய ஏரியாக்களில் வீடுகள் வாடகைக்கு கிடைப்பதும் சவாலாக உள்ளது. வீட்டு வாடகை உச்சத்தில் இருப்பதால் பலரும் லீசுக்கு வீடு தேடி குடியேற விரும்புகிறார்கள். ஆனால் நல்ல வீடுகள் ஓரளவு நியாயமான லீஸ் தொகையில் வீடு கிடைப்பதே இல்லை.. வாடகைக்கும் நல்ல வீடுகள் நியாயமான வாடகையில் அமைவதே இல்லை. இதனால் லீஸ் வீட்டுக்கு செல்லவே மக்கள் கடுமையான சவாலை சந்திக்கிறார்கள். அப்படியே வீடுகள் லீசுக்கு கிடைத்தாலும் அது சிக்கலாக முடிகிறது. இதுபற்றி நெட்டிசன் போட்ட பதிவினை பார்ப்போம்.

சமூக வலைதளமான எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் குமார் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறுகையில், "சென்னையில் மற்றும் அதை சுத்தி எங்கயாச்சும் வீடு லீசுக்கு இருக்குன்னா வாடகை மிச்சம் ஆகும் அப்படின்னு யாரும் அவசரப்பட்டு இருக்க காலெல்லாம் குடுத்து போயிடாதீங்க. கொரோனாவுக்கு அப்புறம் நிறைய வீடு ஈஎம்ஐ கட்டாம கலெக்சனுக்கு போயிருக்கிறது. அந்த மாதிரி வீடுங்க தான் லீசுக்கு விடுறாங்க.
நம்மகிட்ட மொத்த பணத்தையும் வாங்கி அந்த காசை 1 வருச ஈஎம்ஐ கட்டிடுறாங்க. சரி அதனால உங்களுக்கு என்ன பிரச்சனை அப்படின்னா இந்த மாதிரி கலெக்சனுக்கு போன வீட்டுக்காரங்க ஒரு ஈஎம்ஐ லேட்டா கட்டுனாலும் கலெக்சன் ஏஜன்ட்ஸ் நேரா நீங்க இருக்க வீட்டுக்கு தான் வருவாங்க.
ஒவ்வொரு மாசமும் அவங்களுக்கு பதில் சொல்ல வேண்டிவரும். அது போக நீங்க குடுத்த லீஸ் அமௌண்டும் அக்ரீமெண்ட் போட்ட நேரத்துக்கு கிடைக்கும் என்று சொல்லிட முடியாது.. ஏன் என்றால், அந்த வீட்டோட ஓனர் ஏற்கனவே கடனில் தான் இருப்பான். ஆகவே லீஸ் மட்டும் விசாரிக்காம போயிடாதீங்க. நான் அப்படிதான் மாட்டிகிருக்கேன்..
வீடு இனி வாடகைக்கே போனாலும் 2 மாசம் வாடகை அட்வான்சும் வருட வாடகை 1 இலட்சத்தை தாண்டும்பட்சத்தில் அதை கட்டாயம் ரெஜிஸ்டர் பண்ணனும்னு ஒன்றிய அரசு ஆர்டர் போட்ருக்கு. அதனால வாடகை பத்திரத்தை பதிவு பண்ணாம எங்கயும் வாடகைக்கு கூட போகாதீங்க & பத்திரத்தை ரெஜிஸ்டர் பண்ணி தரவேண்டியது landlord கடமை. இது உங்களுக்கு address proofs like ஆதார் கேஸ் கனெக்சன் & ரேஷன் கார்ட் போன்ற பல ஆவணங்களில் அட்ரெஸ் மாத்த உதவும்.முக்கியமா நீங்க salaried ஆ இருந்தா HRA claim panna அதவும். அதனால பத்திரத்தை பதிவு பண்ணாம எந்த வீட்டுக்கும் குடி போகாதீங்க. அதையும் மீறி போனீங்கன்னா என்ன மாதிரி கோர்டுக்கும் எஸ்பி ஆபிசுக்கும் தான் அலைஞ்சிட்டு இருக்கனும். கவனம்." இவ்வாறு கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications