"10 நாள் கூட இல்லை.." தங்க மார்கெட்டில் ஏற்படும் பூகம்பம்.. உலகமே அமெரிக்காவை தான் உற்று பார்க்குது
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே பெரியளவில் ஏற்றம் இறக்கம் இல்லாமல் நிலையாக இருந்து வருகிறது. இதற்கிடையே அடுத்த வாரம் அமெரிக்காவில் மிக முக்கியமான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடக்கப் போகிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளைப் பொறுத்தே தங்கம் விலை மாறும். இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
தங்கம் விலை ஏன் திடீரென உயர்கிறது, ஏன் சரிகிறது என்பது பலருக்கும் புரியாத புதிர். இதற்கிடையே கடந்த சில நாட்களாகத் தங்கம் விலையில் பெரிய ஏற்றம் இறக்கம் இல்லாமல் இருக்கிறது. சில நாட்கள் தங்கம் விலை ஏறினால் சில நாட்கள் இறங்குவது என்ற போக்கே இருக்கிறது. சர்வதேச சந்தையில் நடக்கும் சில முக்கிய நகர்வுகளைக் கவனித்தாலே தங்கம் எங்கே செல்லும் என்பதைக் கணித்துவிடலாம்.

அடுத்த வாரம் மீட்டிங்
குறிப்பாக, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் (US Fed) எடுக்கும் முடிவுகள் தான் தங்கத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கின்றன. அடுத்த வாரம் அதாவது ஏப்ரல் 28, 29 தேதிகளில் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. அதில் எடுக்கப்படும் முடிவுகளே முக்கியத்துவம் பெறும். அமெரிக்க ஃபெட் வட்டி விகிதத்தைப் பொறுத்தே தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். இது தொடர்பான ஒரு சிம்பிள் கணக்கு!
என்ன நடக்கும்
அதாவது அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை ஏறும், வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை இறங்கும். இதுதான் அடிப்படை. சரி, தற்போதைய சூழலில் நிலவரம் எப்படி இருக்கிறது?
வட்டி விகிதம் குறைப்பு: இது நடப்பதற்கு வாய்ப்பு மிகக் குறைவு. பொருளாதார சூழல்களால் இது நடக்க வாய்ப்பு குறைவு. ஆனால், அப்படி நடந்தால் தங்கம் விலை மின்னல் வேகத்தில் எகிறும்.
வட்டி விகிதம் உயர்வு: இதற்கும் வாய்ப்பு குறைவு தான். ஒருவேளை வட்டி விகிதம் உயர்த்தினால், தங்கம் விலை சரியும். இருப்பினும், வட்டி உயர்ந்தால் பொருளாதார சூழல் பாதிக்கப்படும் என்பதால் இதற்கும் வாய்ப்பு குறைவு!
நிலையான வட்டி: வட்டியை ஏற்றவும் மாட்டார்கள்.. குறைக்கவும் மாட்டார்கள்.. தற்போது அமெரிக்காவில் வட்டி விகிதம் 3.5%-3.75%ஆக இருக்கும் சூழலில், அது அப்படியே தொடரும்.
கவனிக்க வேண்டியது
இங்கேதான் ஒரு 'ட்விஸ்ட்' இருக்கிறது: வட்டி விகிதம் மாற்றப்படாதபோது, பெட் வங்கித் தலைவரின் பேச்சு முக்கியத்துவம் பெறும்! அவர் பொருளாதாரம் குறித்து எச்சரிக்கையாகப் பேசினால், அதாவது பணவீக்கம் அதிகமாக இருக்கிறது எனச் சொன்னால்.. தங்கம் விலை சரியும்.. அதேநேரம் அவர் பொருளாதாரம் சீராக இருக்கிறது என பாசிட்டிவாக பேசினால் தங்கம் விலை உயரும்.. எனவே அடுத்த வாரம் நடக்கும் கூட்டத்தை ஒட்டுமொத்த உலகமும் நகை பிரியர்களும் கூர்ந்து கவனித்தே வருகிறார்கள்.
இதர காரணங்கள்
இது தவிரத் தங்கம் விலையைத் தீர்மானிப்பதில் சில காரணங்கள் உள்ளன. அதில் முதன்மையானது வளைகுடா பதற்றம்.. அங்குப் பதற்றம் நீடித்தால் தங்கம் விலை உயரும்.. அதேபோல டாலர் மதிப்பும் முக்கியம். டாலரின் மதிப்பு உயர்ந்தால், தங்கம் விலை குறையும். தற்போது அமெரிக்கா - ஈரான் பதற்றம் காரணமாக டாலர் மீதான மதிப்பு உயர்ந்துள்ளது. இதுவும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் தங்கத்தைப் பொறுத்தவரை அது வெறும் ஆபரணம் மட்டுமல்ல.. சர்வதேச அரசியலோட 'தெர்மாமீட்டர்'. மத்திய கிழக்கு நாடுகளில் ஒரு குண்டு வெடிச்சாலும், அமெரிக்க பொருளாதாரம் குறித்து ஒரு அறிக்கை வந்தாலும் அதோட அதிர்வு நம்ம ஊர் நகைக்கடை ரேட் போர்டுல் தெரியும்.












Click it and Unblock the Notifications