விஜய்-யின் பிரம்மாண்ட வெற்றி.. சன் டிவி பங்குகளின் நிலை என்ன?

Subscribe to Oneindia Tamil

தமிழக அரசியலில் தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியும், விஜய்யின் வெற்றியும் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக சூழலை எப்படி பாதிக்கும் என்ற கேள்வி தொழில்துறை வட்டாரங்களில் எழுந்துள்ளது. தமிழ்நாடு இந்தியாவின் முக்கிய பொருளாதார மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் வேளையில் திராவிட கட்சிகள் இல்லாத அரசு அமையும் காரணத்தால் பல கேள்விகள் முதலீடு சந்தையில் எழுந்துள்ளது.

ஆட்டோமொபைல், நிதி சேவைகள் மற்றும் டெக்ஸ்டைல் துறைகளைச் சேர்ந்த பல பெரிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை தாயகமாக கொண்டிருக்கும் வேளையில் பங்குச்சந்தையில் எத்தகைய தாக்கத்தை இன்று ஏற்படுத்தியுள்ளது?

TVK Vijay Politics Stock Market Vijay TVK 2026 victory stock market Sun TV share price today Sun TV recovers after fall Tamil Nadu stocks after TVK win Ashok Leyland share price TVS Motor share today MRF share performance Tamil Nadu business sentiment Vijay Cholamandalam Finance share Karur Vysya Bank stock Thangamayil Jewellery share Kalyan Jewellers share Apollo Hospitals share Tamil Nadu election 2026 market reaction Vijay victory no negative impact business 2026 2026

சன் டிவி பங்குகள் நேற்றைய சரிவிலிருந்து மீண்டது

நேற்றைய வர்த்தகத்தில் தேர்தல் முடிவுகள் வெளியானபோது சன் டிவி நெட்வொர்க் பங்குகள் மும்பை பங்குச்சந்தையில் 9.5 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்து, 547.55 ரூபாய் என்ற குறைந்த விலையை எட்டியது. ஆனால் இன்று சரிவு பாதையில் இருந்து மீண்டு 0.45 சதவீதம் உயர்ந்து 579.85 ரூபாய் விலையில் வர்த்தகமாகி வருகிறது.

தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்கள்

தமிழ்நாட்டில் சன் டிவி, அசோக் லேலண்ட், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி, எம்ஆர்எஃப், KPR மில், இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ், கரூர் வைஸ்யா பேங்க், சன் பார்மா, தங்கமயில் ஜுவல்லரி, கல்யாண் ஜூவல்லர்ஸ் மற்றும் அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் தலைமையிடம் அல்லது பெரிய உற்பத்தி மையங்களை கொண்டுள்ளன.

ஆட்டோமொபைல், நிதி சேவை, டெக்ஸ்டைல், உற்பத்தி என பல துறைகளை சேர்ந்த தமிழ்நாட்டு நிறுவனங்கள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான ஆட்சி மாற்றம் இன்றைய பங்குச்சந்தையில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை இப்போது பார்ப்போம்.

சன் டிவி - 0.40 சதவீதம் உயர்வு
அசோக் லேலண்ட் - 0.12 சதவீதம் உயர்வு
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி - 0.95 சதவீதம் உயர்வு
எம்ஆர்எஃப் - 0.16 சதவீதம் உயர்வு
KPR மில் - 0.05 சதவீதம் சரிவு
இந்தியன் பேங்க் - 0.27 சதவீதம் உயர்வு
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் - 0.66 சதவீதம் சரிவு
சோழமண்டலம் இன்வெஸ்ட்மெண்ட் அண்ட் ஃபைனான்ஸ் - 1.68 சதவீதம் உயர்வு
கரூர் வைஸ்யா பேங்க் - 0.22 சதவீதம் சரிவு
தங்கமயில் ஜுவல்லரி - 0.27 சதவீதம் சரிவு
கல்யாண் ஜூவல்லர்ஸ் - 1.34 சதவீதம் சரிவு
அப்போலோ ஹாஸ்பிடல்ஸ் - 0.31 சதவீதம் சரிவு

நிபுணர்கள் கணிப்பு

பொதுவாக, பொது தேர்தல் போல் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தை பாதிக்காது என்றாலும், மாநில அளவிலான மாநில வர்த்தகத்தை அதிகளவில் நம்பியிருக்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட தாக்கம் ஏற்பட்டாலும், அதுவும் உடனடியாக இல்லாமல் நீண்ட கால அடிப்படையில் தான் உயர்வோ, குறைவோ ஏற்படும்.

மேலும் விஜய்யின் வெற்றி தமிழ்நாட்டின் வணிக சூழலை எந்த விதத்திலும் எதிர்மறையாக பாதிக்காது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டின் தொழில்துறை சூழல் ஏற்கனவே வலுவான அடித்தளத்தை கொண்டிருப்பதால், அரசியல் மாற்றம் விஜய்யின் வெற்றி வர்த்தக நம்பிக்கையை பாதிக்காது என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

இன்றைய வர்த்தக மந்த நிலையும், நேற்றைய சரிவும் முழுக்க முழுக்க வர்த்தக சந்தையை சார்ந்தது, தவெக வெற்றி முடிவால் எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. சென்செக்ஸ் இன்று 700 புள்ளிகளுக்கு மேல் சரிந்தாலும் தற்போது 400 புள்ளிகள் சரிந்து 76,869.41 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+