6 சிலிண்டர் இலவசம்.. ஆனா மே 15 வரை வெயிட் பண்ணுங்க.. புதிய ரேஷன் கார்டு குறித்து அதிரடி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ள சூழலில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தந்திருந்த தேர்தல் வாக்குறுதி தற்போது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பதுதான் அந்த மாஸான வாக்குறுதி.. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், பல மாதங்களாகப் புதிய குடும்ப அட்டைக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான பொதுமக்களுக்கு மற்றுமொரு மகிழ்ச்சி செய்தியும் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே அரசு அறிவிக்கும் எந்தவொரு நலத்திட்டத்தையும், குறிப்பாக இந்த இலவச சிலிண்டர் போன்ற சலுகைகளையும் பெற முடியும்.

Ration Card Free LPG Tamil Nadu Smart Card Election Promise TVK Vijay TNPDS Public Notice

எனவே, 6 சிலிண்டர் இலவசம் என்ற வாக்குறுதி அமலுக்கு வரும்போது, தகுதியுள்ள பயனாளிகளை அடையாளம் காண ரேஷன் கார்டு தரவுகளே அடிப்படையாக அமையும் என்பதால், புதிய கார்டு கோரி விண்ணப்பிப்பவர்கள் இந்த அறிவிப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்..

6 இலவச சிலிண்டர்கள்

கடந்த சில மாதங்களாகத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால், புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இதனால் புதியதாகத் திருமணமானவர்கள் மற்றும் தனிக்குடித்தனம் சென்றவர்கள் எனப் பல தரப்பினரும் புதிய கார்டு பெற முடியாமல் தவித்து வந்தனர்.. தற்போது தேர்தல் நடைமுறைகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் மே 15ம் தேதி முதல் புதிய விண்ணப்பங்களை ஆய்வு செய்யும் பணிகளும், தகுதியுள்ளவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகளை வழங்கும் பணிகளும் மீண்டும் தொடங்கப்பட உள்ளன.

மே 15 முதல் விண்ணப்பம்

அதே தேர்தல் காலத்தில் கொடுக்கப்பட்ட 6 சிலிண்டர் வாக்குறுதியும் தற்போது மே 15 முதல் தொடங்க உள்ள கார்டு விநியோகமும் ஒரே நேரத்தில் கவனிக்கப்படுவதால் மக்கள் மத்தியில் இது முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.

புதிய கார்டு கையில் இருந்தால் மட்டுமே, வருங்காலத்தில் வரப்போகும் இது போன்ற சலுகைகளைத் தடையின்றிப் பெற முடியும்.. அதனால் தான் மே 15-ஆம் தேதி தொடங்க உள்ள புதிய கார்டு விண்ணப்பப் பரிசீலனை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது..

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பம்

புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சில முக்கியமான ஆவணங்களைக் கைவசம் வைத்திருக்க வேண்டும்.. குறிப்பாக, குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் அடையாளச் சான்றுகள், சமையல் எரிவாயு (LPG) இணைப்பு குறித்த விவரங்கள், குடும்பத் தலைவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வசிப்பிடத்தை உறுதிப்படுத்தும் முகவரி சான்றுகள் ஆகியவை அவசியம்.

நீங்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, உங்களின் சமையல் எரிவாயு இணைப்பு விவரங்களைக் கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டும்.. உங்களிடம் ஏற்கனவே எத்தனை சிலிண்டர் இணைப்புகள் உள்ளன என்பதைப் பொறுத்தே புதிய கார்டுக்கான தகுதி தீர்மானிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.. முகவரி சான்றாக மின்சார கட்டண ரசீது அல்லது வாடகை ஒப்பந்தப் பத்திரம் போன்றவற்றைச் சமர்ப்பிக்கலாம்..

ஆவணக் குளறுபடிகள் - ஆன்லைன் விண்ணப்பம்

முன்னதாக விண்ணப்பித்து, ஆவணக் குளறுபடிகளால் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும் தற்போது மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. அவர்கள் தேவையான திருத்தங்களைச் செய்து, மே 15-க்குப் பிறகு மீண்டும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.. பொதுமக்கள் இந்தச் சேவையைப் பெற அரசு அலுவலகங்களுக்கு அலைவதைத் தவிர்க்க, தமிழ்நாடு பொது விநியோக திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணைய வசதி இல்லாதவர்கள் தங்களுக்கு அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாகவும் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.. விண்ணப்பித்தவுடன் வழங்கப்படும் குறிப்பு எண்ணை வைத்து, உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை ஆன்லைனில் அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளும் வசதியும் இதில் உள்ளது..

புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள்

ஆன்லைனில் பெறப்படும் விண்ணப்பங்களை அந்தந்த பகுதி வட்ட வழங்கல் அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்வார்கள்.. விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் ஆவணங்கள் உண்மையானவை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு, மிகக் குறுகிய காலத்திலேயே புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பால் பல மாதங்களாகக் காத்திருந்த பொதுமக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

மே 15 முதல் தொடங்க உள்ள இந்தச் செயல்முறை மூலம் தமிழகம் முழுவதும் விடுபட்ட தகுதியுடைய அனைத்துக் குடும்பங்களுக்கும் விரைவில் ரேஷன் கார்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+