சிறகடிக்க ஆசை: முத்துவுக்கு கிடைத்த பெரிய உதவி.. விஜயாவுக்கு பார்வதி கொடுத்த அசிங்கம்.. சிக்கும் மனோஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் (Siragadikka Aasai serial today episode) சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 மே 9ஆம் தேதிக்கான எபிசோடில், விஜயாவிற்கு பார்வதி சரியான பதிலடி கொடுத்திருக்கிறார். அதே நேரத்தில் வீட்டை மீட்பதற்காக முத்து மற்றும் மீனாவிற்கு உதவி கிடைக்கிறது. மறுபக்கத்தில் சத்யா விஷயத்தில் சிந்தாமணி புது பிளான் போடுகிறார். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

Siragadikka Aasai serial Vijay TV

சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு

சிறகடிக்க ஆசை சீரியலின் (Siragadikka Aasai serial May 9th episode) இன்றைய எபிசோடில் ஆரம்பத்தில், ரோகிணி சிந்தாமணியுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சிந்தாமணி இதுதான் சரியான சமயம், இந்த நேரத்தில் நீ மனோஜை வலிக்கு கொண்டு வர பாரு என்று ஐடியா கொடுக்க, அதையே ரோகிணியும் ஃபாலோ பண்ணுவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.

மறுபக்கத்தில் மனோஜ் ஷோரூமில் எலியை எப்படி பிடிக்கலாம் என்று மனோஜ் ஜீவா மற்றும் சந்தோஷிடம் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ரோகிணி அங்கே வர நடக்குற விஷயங்களை பார்த்து சிரிக்கிறார். பிறகு மனோஜிடம் தனியாக பேசுகிறார். அப்போது நீ என் வீட்ல வந்து தங்கி இருக்கலாமே என்று சொன்னதும் அதற்கு மனோஜ் அம்மாவுக்கு தெரிஞ்சா பெரிய பிரச்சனை ஆயிடும் என்று சொல்ல, அதற்கு ரோகிணி சரி நான் எலியை பிடிக்க உனக்கு ஒரு ஐடியா சொல்லுறேன் என்று சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

சிக்கும் மனோஜ்

உடனே மனோஜ் அப்போ இன்னைக்கு ராத்திரி நீ என்கூட தங்கிக்கோ அந்த எலியை பிடிச்சுருவோம் என்று சொன்னதும் ரோகிணிக்கு இது செம ஐடியா, வசமா அவனே வந்து சிக்கிட்டான் என்று மனதிற்குள் யோசித்துக் கொண்டு சரி என்று சொல்கிறார். மறுபக்கம் முத்துவும் மீனாவும் ஸ்ருதி ரெஸ்டாரண்டுக்கு வருகின்றனர். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும்போது ரவி விஜயாவையும், அண்ணாமலையையும் டூருக்கு அனுப்பி வைக்கலாம் என்று சொல்ல முத்து இந்த நேரத்தில் அவங்க வீட்டில் இல்லாமல் வெளியே போனால் சரிப்பட்டு வராது என்று சொல்லிவிடுகிறார்.

அந்த நேரத்தில் முத்துவின் தங்கச்சி ஹரிணி வந்து நான் உங்களுக்கு என்னுடைய சேவிங்ஸில் இருக்கும் 5 லட்சம் பணத்தை எடுத்து தரேன் என்று சொல்ல, அதற்கு சந்தோஷப்படும் முத்து ஆனால் நீ சம்பாதித்த பணத்தை எங்களுக்கு இப்போதைக்கு தர வேண்டாம் என்று சொல்லி விடுகின்றனர். பிறகு தனக்கு ஒரு பெரிய சவாரி வந்துச்சு ஆனா எனக்கு சரியா இங்கிலீஷ் பேச வராததால என்னால போக முடியல என்று முத்து பீல் பண்ணி சொல்ல அதற்கு முத்துவின் தங்கச்சி நீங்க ஒரு ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போங்க உங்களுக்கு அங்க ஒரு சர்ப்ரைஸ் இருக்கு என்று சொல்கிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

அசிங்கப்படும் விஜயா

மீனா நானும் படிக்கப் போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். மறுபக்கத்தில் விஜயாவை காட்டுகிறார்கள். விஜயாவிடம் வந்து ஸ்ருதியின் அம்மா நாங்க வெளியே போயிட்டு வரோம் இன்னைக்கு ஈவினிங் எங்க வீட்ல ஒரு பார்ட்டி இருக்கு, இது அடிக்கடி நடக்கிறது தான் நீங்க வீட்ட கவனிச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டு கிளம்பும் சமயத்தில் ஸ்ருதியின் அப்பா வந்து கதவை பூட்டிட்டு வா என்று சொன்னதும், அவரும் அதேபோல செய்ய இதனால் விஜயாவிற்க்கு கோபம் வருகிறது.

பார்வதி பதிலடி

உடனே பார்வதிக்கு போன் பண்ணி இவங்க என்ன திருடினு சொல்லுறாங்களா எதுக்காக இப்படி எல்லாம் பண்ணுறாங்க. என்னால இந்த வீட்ல இருக்க முடியல. நான் உன் வீட்டுக்கு வரேன் என்று சொல்ல, பார்வதி நீ தனியா என் வீட்டுக்கு வரக்கூடாது. வராதா இருந்தா அண்ணன் கூடவா இல்லன்னா நீ அண்ணன் இருக்கிற இடத்தில போய் இரு என்று சொல்லிவிடுகிறார். இதனால் விஜயா கோபத்தில் போனை கட் பண்ணி விடுகிறார்.

Siragadikka Aasai serial Vijay TV

சிந்தாமணி பிளான்

அடுத்ததாக சிந்தாமணி வீட்டில் யோசித்துக் கொண்டிருக்கிறார் அந்த சமயத்தில் அவருடைய கணவர் வீட்டிற்கு வருகிறார். அவர் பெங்களூரில் இருந்து ரேகா சென்னைக்கு வரேன் என்று சொல்கிறார் என்று சொல்ல, அதற்கு சிந்தாமணி அவளை இப்ப இங்க வர வைக்க வேண்டாம். வந்தா அவ சத்யா கூட ஊர் ஊர் சுத்துவா, அதனால முதலில் இந்த சத்யாவை இங்கிருந்து வெளியே அனுப்பனும் என்று ஒரு பிளான் போடுகிறார்.

முத்து கேட்ட கேள்வி

ஆனால் என்ன பிளான் என்பதை வெளியே காட்டாமல் சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கிறார்கள். கடைசியாக முத்துவும் மீனாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அப்போது முத்து நான் உன் கூட பேசலனா நீ எத்தனை நாள் வரைக்கும் காத்திருப்ப என்று கேட்க, அதற்கு மீனா நாம சண்டை போட்டா நீங்க எப்ப வந்து என்கிட்ட பேசுவீங்கன்னு காத்து தேடி இருப்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+