மாற்றுத்திறனாளிகள் பென்ஷன்.. 40% பாதிப்பு இருந்தாலே கிடைக்குமா? மத்திய அரசு போட்ட புது கணக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இதுவரை 80% பாதிப்பு இருந்தால்தான் ஓய்வூதியம் பெற முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், இனி 40% பாதிப்பு இருந்தாலே ஓய்வூதியம் பெற தகுதி கிடைக்கும் வகையில் விதிகளை மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதுமட்டுமல்ல.. பிறந்த குழந்தைகளுக்கும் இந்த உதவி கிடைக்கும் வகையில் வயது வரம்பிலும் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்?

நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு 1995-ம் ஆண்டு NSAP எனப்படும் தேசிய சமூக உதவித் திட்டத்தை தொடங்கியது.

Central Government Disability Pension

இந்த திட்டத்தை அடுத்த 5 வருடங்களுக்கும் தொடர்ந்து செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது, 2026-27 முதல் 2030-31 வரை இந்தத் திட்டம் தொடரும். இதற்காக ரூ.53,428 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு பென்ஷன்

இந்தத் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. இப்போது இந்தத் திட்டத்துக்கும், இதன் கீழ் செயல்படும் சில திட்டங்களுக்கும் புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. இதுதான் மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முக்கியமான தளர்வாகும்.. இதுவரை இந்த ஓய்வூதியத் திட்டத்தில் பயன்பெற 80% மாற்றுத்திறன் இருக்க வேண்டும் என்ற தகுதி இருந்தது. இனிமேல் அந்த அளவு 40% ஆக குறைக்கப்படுகிறது.

அதாவது 40% அல்லது அதற்கு மேல் மாற்றுத்திறன் உள்ளவர்கள், திட்டத்தின் மற்ற தகுதிகளையும் பூர்த்தி செய்தால் ஓய்வூதியம் பெறத் தகுதியானவர்களாக இருப்பார்கள். இதனால் முன்பு தகுதி பெற முடியாமல் இருந்த சிலருக்கும் உதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.

பிறந்த குழந்தைக்கும் உதவித்தொகை

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச வயது வரம்பையும் நீக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தகுதியுள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறந்தது முதலே, அதாவது 0 வயதிலிருந்தே இந்த உதவியை பெறும் வகையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், 0 முதல் 79 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.375 வழங்கப்படும். 80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு மாதம் ரூ.625 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த தொகையை பார்த்துவிட்டு உடனடியாக பணம் கிடைத்துவிடும் என்று நினைத்து விட கூடாது.. புதிய தகுதி விதிகள், உதவித்தொகை மற்றும் பயனாளிகள் தொடர்பான விரிவான வழிகாட்டுதல்கள் இன்னும் 3 மாதங்களுக்குள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். அதன்பிறகுதான் புதிய விதிகள் நடைமுறைக்கு வரும்.

விதவைகளுக்கான ஓய்வூதியம்?

ஆனால், இந்த அறிவிப்பை பார்த்ததும், முதியோர் மற்றும் விதவைகளுக்கான ஓய்வூதியத்திலும் மாற்றம் வந்துவிட்டதா என்ற சந்தேகம் எழலாம். அவர்களுக்கான ஓய்வூதியத் திட்டங்களில் எந்த மாற்றமும் இல்லை. குடும்ப நலத் திட்டமும் பழையபடியே தொடரும்.

இந்த திட்டங்களின் பெயர்கள் மட்டுமே மாற்றப்பட்டுள்ளன. நாடு முழுவதும் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சுமார் 3.20 கோடி ஏழை மக்கள் இந்தச் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களால் பயன்பெறுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதனால் மாற்றுத்திறனாளிகள் பென்ஷன் பெற விரும்புபவர்கள் புதிய வழிகாட்டுதல்கள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டும். புதிய விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகு, யாரெல்லாம் தகுதி பெறுவார்கள், எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்ற விவரங்கள் தெளிவாகத் தெரியவரும்...!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+