வந்தாச்சு தீபாவளி! ரேஷன் கடையில் மளிகை பொருட்கள்! விரைவில் விஜய் அறிவிப்பு? எத்தனை ஐட்டங்கள்?
சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இலவச மளிகை தொகுப்பு வழங்கலாம் என்ற யோசனையில் முதல்வர் விஜய் இருப்பதால் அதற்கான நிதி இருப்பு, ஆகும் செலவு உள்ளிட்டவை குறித்து நிதித் துறை செயலாளரிடம் அவர் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.
தமிழகத்தில் தற்போது அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் ஏழை எளிய மக்களின் பாடு திண்டாட்டமாக உள்ளது. விலைவாசி உயர்வில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஒரு அரசு என்றால் மக்களின் விலைவாசி உயர்வு பிரச்சனையை தீர்க்க வேண்டும். அதைவிட்டுவிட்டு இலவச பேருந்து பயணம், தாய்மாமன் தங்க மோதிரம், அண்ணன் சீர் திட்டங்களை எல்லாம் யார் கேட்டது என்றுதான் மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
எதிர்க்கட்சிகள்
இவ்வாறு எதிர்க்கட்சிகளும், சாமானிய மக்களும் எழுப்பி வரும் கேள்விகள் தவெக அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்களின் நன்மதிப்பை பெற தவெக அரசு ஒரு யோசனையை செய்துள்ளது.
தீபாவளி பண்டிகை
அதாவது தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன் கடைகள் மூலம் இலவச மளிகை பொருட்கள் தொகுப்பை வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு தேவையான நிதி எவ்வளவு என நிதித் துறையிடம் முதல்வர் விஜய் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
என்னென்ன பொருட்கள்?
10 முதல் 15 மளிகை பொருட்களை கொடுத்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவர் என யாரோ ஐடியா கொடுத்திருப்பது போல் தெரிகிறது. நமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் என்னென்ன மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
அரிசி
துவரம் பருப்பு
கடலை பருப்பு
உளுந்து
மிளகாய்
தனியா
புளி
கடுகு
மிளகு
சீரகம்
வெந்தயம்
ஏலக்காய், முந்திரி, திராட்சை
சர்க்கரை அல்லது வெல்லம்
உள்ளிட்ட 15 பொருட்களை தரலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறதாம். எனவே விரைவில் இது குறித்த அறிவிப்புகள் வர வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதுவரை கொடுத்தது என்ன?
கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்ற போது கொரோனா பெருந்தொற்று இருந்தது. அப்போது மே மாதம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 இரு தவணைகளாக கொடுக்கப்பட்டது. அது போல் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த மக்களின் சுமையை கருத்தில் கொண்டு ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் கொடுக்கப்பட்டன.
துணிப்பையுடன் 14 மளிகை பொருட்கள் கொள்முதல் விலையாக ரூ 397.33 கணக்கிடப்பட்டது. கோதுமை மாவு, உப்பு, ரவை, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, புளி, கடலை பருப்பு, டீ தூள், கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப்பு ஆகிய 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய கொரோனா சிறப்பு நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கியது.
அது போல் கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு ரூ 2500 வழங்கப்பட்டது. அதனுடன் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டன.
2022 ஆம் ஆண்டு பச்சரிசி, சர்க்கரையுடன் முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு, நெய் உள்ளிட்ட 21 மளிகை பொருட்கள் அடங்கிய பையும், முழு கரும்பும், ரூ 1000 ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Click it and Unblock the Notifications
