ஐயோ.. நெஞ்சு பதறுதே.. 18 மாத குழந்தையை 6வது மாடியில் இருந்து வீசிய 10 வயது சிறுமி.. பகீர் சம்பவம்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் குடியிருப்பு கட்டடத்தின் 6வது மாடியில் இருந்து 18 மாத குழந்தையை 10 வயது சிறுமி தூக்கி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் குழந்தை உயிரிழந்த நிலையில், சிறுமியை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். சிறுமியின் தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

வீட்டில் குழந்தைகள் இருந்தால் எப்போதும் நாம் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். இல்லையென்றால் சில எதாவது விபரீதம் நடந்துவிடும். அப்படியொரு அதிர்ச்சி சம்பவம் தான் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கோரேகான் பகுதியில் நடந்துள்ளது.

maharashtra crime

தூக்கி வீசிய சிறுமி

அங்கு கோரேகானில் உள்ள சிவ்ஷாஹி குடியிருப்பு கட்டடத்தில் புதன்கிழமை இரவு சுமார் 9 மணியளவில் ஒரு மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது 10 வயது சிறுமி ஒருவர், வெறும் 18 மாதங்களே ஆன குழந்தையை மாடியில் இருந்து தூக்கி வீசியிருக்கிறார். இது தொடர்பான காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன.

அதில் அந்த 10 வயது சிறுமி 18 மாத குழந்தையை 6வது மாடியில் இருந்து தூக்கி கீழே வீசிவிட்டு, மறுபுறம் ஓடி செல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. குழந்தை கீழே விழுந்ததற்கு பிறகு, அந்த சிறுமி அதே மாடியில் உள்ள காரிடாரில் சர்வ சாதாரணமாக சைக்கிள் ஓட்டி செல்வதும் பதிவாகியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பின்னணி

அந்த குழந்தையின் குடும்பத்தினர் கடந்த அக்டோபர் 1ம் தேதிதான் அந்த கட்டிடத்தில் குடிபெயர்ந்துள்ளனர். அண்டை வீட்டாருக்கும் இவர்களுக்கும் பூனை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்தே இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது. மறுபுறம், 10 வயது சிறுமிக்கு மனநல பிரச்சினைகள் இருந்ததாக கூற்பபடுகிறது.. இருப்பினும், இதை யாரும் உறுதி செய்யவில்லை

இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும், சம்பவத்தை மறைப்பதற்காக சிறுமியின் குடும்பத்தினர் சிசிடிவி கேமராக்களை ஆஃப் செய்துவிட்டு, அதை டெலிட் செய்யவும் முயன்றதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


போலீஸ் விசாரணை

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையைத் தொடங்கினர். குழந்தையைத் தூக்கி வீசிய சிறுமியிடம் விசாரணை நடத்திய போலீசார், அவரது தாயையும் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக போலீசார், "சிசிடிவி காட்சிகளில் குழந்தை 6வது மாடியில் இருந்து தூக்கி வீசப்படுவது பதிவாகியுள்ளது. அதை தொடர்ந்து, குழந்தையை வீசிய சிறுமி அந்த இடத்திலிருந்து ஓடி செல்வதும், பின்னர் அதே மாடியின் காரிடாரில் சைக்கிள் ஓட்டுவதும் தெரிகிறது. இது குறித்து அடுத்தகட்ட விசாரணையை நடத்தி வருகிறோம்" என்றார்.

பகீர்

இந்த சம்பவம் தொடர்பாக தற்செயலான மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தின் பின்னணி, இரு குடும்பங்களுக்கு இடையிலான தகராறு மற்றும் சிசிடிவி வீடியோக்களை அடிப்படையாக கொண்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+