விஜய்யின் ஜனநாயகனை முந்திய ரஜினியின் ஜெயிலர் 2! முதல் நாள் வசூலில் இத்தனை கோடி வித்தியாசமா?
சென்னை: ரஜினிகாந்த், விஜய் என்று தமிழ் சினிமாவின் 2 பெரிய நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே வசூல் கணக்குகளை ஒப்பிட்டுப் பார்ப்பது ரசிகர்களுக்கு தனி கொண்டாட்டம்தான். இப்போது ரஜினியின் ஜெயிலர் 2 படமும் விஜய்யின் ஜனநாயகன் படமும் முதல் நாள் வசூல் கணக்கில் பேசுபொருளாகியிருக்கின்றன. இதில் யாருடைய படம் அதிக வசூல் செய்திருக்கிறது தெரியுமா?

ஜெயிலர் 2 முதல் நாள் வசூல்
முதலில் ஜெயிலர் 2 படத்தைப் பார்ப்போம். ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கிய இந்த படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. முதல் நாளிலேயே இந்தியாவில் ரூ.70.25 கோடி மொத்த வசூலும், வெளிநாடுகளில் ரூ.55 கோடி வசூலும் கிடைத்துள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் கிடைத்திருக்கிறது. இதன் மூலம் உலகம் முழுவதும் முதல் நாள் மொத்த வசூல் ரூ.125.25 கோடியைத் தொட்டிருக்கிறது.
ஜனநாயகன் முதல் நாள் வசூல்
இப்போது விஜய்யின் ஜனநாயகன் படத்துக்கு வருவோம். விஜய்யின் கடைசிப் படம் என்று பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்த படம் ஜூலை 23ஆம் தேதி வெளியானபோது, முதல் நாள் உலகளாவிய வசூல் சுமார் ரூ.80.28 கோடி என்று கூறப்படுகிறது. அதனால், இந்த 2 படங்களின் வசூலையும் ஒப்பிட்டு பார்த்தால், ஜெயிலர் 2 முதல் நாளில் ஜனநாயகனைவிட அதிக வசூல் செய்திருக்கிறது. ஜெயிலர் 2 சுமார் ரூ.45 கோடி முன்னிலையில் இருக்கிறது.
ஆனால், இதற்காக விஜய் ரசிகர்கள் கவலைப்பட வேண்டியதில்லை, ரஜினி ரசிகர்கள் இப்போதே கோப்பையைத் தூக்க வேண்டியதும் இல்லை. முதல் நாள் வசூல் என்பது படத்தின் ஒரு முக்கியமான கணக்குதான். ஆனால், மொத்த வசூல், அடுத்தடுத்த நாட்களில் ரசிகர்கள் காட்டும் ஆர்வம், படத்துக்குக் கிடைக்கும் வரவேற்பு என நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஜெயிலர் 2 படத்தில் ரஜினியின் ஸ்கிரீன் ப்ரெசென்ஸ், நெல்சனின் காமெடி ஸ்டைல், அனிருத்தின் இசை ஆகியவை பேசப்படுகின்றன. ஜனநாயகனைப் பொறுத்தவரை விஜய்யின் திரை வாழ்க்கையில் முக்கியமான படம் என்பதால் அதற்கும் தனி எதிர்பார்ப்பு இருந்தது.
யார் முன்னிலை
ஆக, இப்போதைய முதல் நாள் வசூல் கணக்கில் ரஜினியின் ஜெயிலர் 2 முன்னிலையில் இருக்கிறது. ஆனால், இந்த வசூல் ஒப்பீட்டை வைத்து மட்டும் எந்த படம் பெரிய வெற்றி என்று முடிவு செய்துவிட முடியாது. 2 படங்களின் இறுதி வசூல் கணக்குகள் வந்த பிறகுதான் முழுமையான ஒப்பீடு சாத்தியம். அதுவரை ரசிகர்களின் வசூல் கணக்கு விவாதம் மட்டும் இணையத்தில் அனல் பறக்க போவது உறுதி.
ரசிகர்கள் கருத்து
ஏற்கனவே சினிமாவில் ரஜினி தான் என்னுடைய ரோல் மாடல் என்று விஜய் ஆரம்பத்தில் சொல்லிக் கொண்டிருந்தாலும் கடைசியில் இருவருக்கும் தான் அதிக போட்டியே இருந்தது. ஆனால் இப்போது விஜய் சினிமாவை விட்டு விலகிவிட்டார், ஆனாலும் விஜய் ரசிகர்கள் ரஜினியை இன்னும் வம்பு இழுத்து கொண்டு இருக்கிறார்கள். ஜனநாயகன்படம் ஏற்கனவே இணையத்தில் லீக் ஆன பிறகும் அதிக வசூல் பெற்றிருந்தது. அதனால் இந்த ஒப்பிட்டை கொஞ்சம் பொறுத்து இருந்து பாருங்க என்று விஜய் ரசிகர்கள் கமெண்ட்ஸ் கொடுக்கிறார்கள். சரி இனி வசூல் நிலவரம் எப்படி இருக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications
